ரஜினி, அஜித், விஜய் படங்களில் நடிக்க ஆசையாய் இருக்கு.. பிரபல நடிகர் பேட்டி.!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து ஓடி வருகின்றனர். இவரது படத்தில் நடிக்க வேண்டும் என பல இளம் நடிகர்கள் தொடங்கி வளர்ந்து வரும் ஹீரோக்கள் வரை ஆசைப்படுகின்றனர் ஆனால் கதையின் தேவைக்கு ஏற்ப ஒரு சில நடிகர் நடிகைகளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால் ஒரு சிலர் ஆசைப்பட்டாலும் அந்த வாய்ப்பு நிறைவேறாமலே இருக்கும் அப்படித்தான் நடிகர் சிம்புவுக்கு அஜித், விஜய், ரஜினி போன்ற டாப் நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ஆசை ஆனால் அது இதுவரை நடந்ததே இல்லை.. ஆனால் இந்த நடிகருடன் நெருங்கிய வட்டாரத்தில் சிம்பு இருந்து வருகிறார் என்பது மட்டும் உறுதியாக சொல்லப்படுகிறது.

தனது ஆசை நிறைவேறும் என நினைத்துகொண்டு பாசிட்டிவுடன் சிம்பு இருக்கிறார். மேலும்  தனது படங்களிலும் கவனம் செலுத்தியும் மறுபக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்பு வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்திற்காக சிம்பு 22 கிலோ உடல் எடையை குறைத்து சின்ன பையனாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் போஸ்டர் போன்றவற்றை பார்க்கும் பொழுது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. நிச்சயம் வெந்து தனிந்தது காடு படம் சிம்புவுக்கு ஒரு பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என பல்வேறு பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை கூறி வருகின்றனர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்பு சொல்லி உள்ளது என்னவென்றால் இந்த படத்தை நீங்கள் இடைவெளி பொழுதும் கிளைமாக்ஸின் பொழுதும் உற்று கவனிக்க வேண்டும் என கூறினார்.

இந்த நிலையில் அவர் பேட்டி ஒன்றில் கூறியது, அஜித் விஜய் ரஜினி போன்ற டாப் நடிகரின் படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை இப்பொழுதும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் அஜித் விஜய் ரஜினி யாரேனும் ஒருவராவது சிம்புவுக்கு வாய்ப்பு கொடுக்கலாமே என கூறி வருகின்றனர்.

Leave a Comment