சினிமாவில் உலக அளவில் சாதிக்க ஒரு அரிய வாய்ப்பு.! இதோ மாஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவில் பலரும் சாதிக்கத் துடிக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு என்பது கடினமான ஒன்றாக இருந்தது ஆனால் தற்பொழுது சமூக வலைதளங்கள் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டதால் மிக எளிதாக சாதிப்பவர்கள் வெளியே தெரிந்து விடுகிறார்கள்.

இந்த அளவில் பிரம்மாண்டமாக TORONTO தமிழ் சர்வதேச திரைப்பட விழா (Toronto Tamil International Film Festival) இந்த வருடம் 2020ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை கனடாவில் நடைபெற இருக்கிறது. இந்த சர்வதேச திரைப்பட விழா கனடிய அரசு ஒப்புதலுடன் மற்றும் தனியார் பெரு நிறுவனங்களின் ஒப்பந்தங்களுடன் நடைபெற இருக்கிறது.

மேலும் இந்த விழாவிற்கான போட்டிப் பிரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Feature Film, Long Short (All Genres), Short (All Genres), International Short Films,
Documentary, Photography, Web Series, Animation, Music Video/Album, Advertisement
Social Media Tiny Film, தகவலை அனுப்ப வேண்டிய முகவரி

http://www.ttff.ca , https://filmfreeway.com/ttiff/

இதன் கடைசி நாள் மே 31 2020 ஆகும் குறைந்த கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 15 2020 ஆகும். மேலும் உலக அளவில் பிரபலமான நட்சத்திரங்கள் நடுவர்களாக பங்கேற்கும் இந்த விழாவில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிகலுக்கு கனடா அரசின் அங்கீகாரத்துடன் சான்றிதழும் பிலிம்ஸ் பெஸ்டிவல் சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது.

பரிசு தொகை இல்லாமல் ஒரு முழுநீள திரைப்படத்துக்கான $50, 000 ( தோராயமாக ரூபாய் 3,562,500 ) நிதியுதவியையும், 5 குறும்படத்துக்கான $5,000 ( தோராயமாக ரூபாய் 356,250 ) வரையான உதவியும் வழங்கப்படுகின்றது.

Leave a Comment