போர்வையை போத்திகிட்டு பாய் பிரண்டுடன்..? எங்க அம்மா கண்டுபிடிச்சு வெளுத்துட்டாங்க – லட்சுமி மேனன் சொன்ன சுவாரஸ்ய தகவல்கள்

Lakshmi menon
Lakshmi menon

Lakshmi menon : தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளும் பிரபலமான நடிகையாக வருபவர் லட்சுமி மேனன். இவர் தொலைக்காட்சிகளில் நடனமாடி பிரபலமடைந்தார் அதன் பிறகு இவருக்கு வெள்ளி திரையில் வாய்ப்பு கிடைத்தது மலையாளத்தில் முதலில் அறிமுகமானார் முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் இயக்குனர்கள் பலரும் இவரை திரும்பிப் பார்த்தனர்.

அப்படித்தான் தமிழில் சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த அறிமுகமானார். அதனை தொடர்ந்து கும்கி, பாண்டியநாடு, குட்டி புலி,  நான் சிகப்பு மனிதன், வேதாளம் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து அசத்தினார். இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது விஷாலுடன் இவர் காதலில் விழுந்தார் எனவும்,  இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் எல்லாம் வெளியாகியன.

ஆனால் இதை இரண்டு பேருமே வெளிப்படையாக மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது லட்சுமிமேனனுக்கு பெருமளவு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தன்னை நம்பி வருகின்ற ஒன்று இரண்டு படங்களில் தலைகாட்டி ஓடிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தில் லட்சுமி மேனன் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது அவரிடம் நீங்கள் திருட்டுத்தனமாக  வேலை செய்து மாட்டிக் கொண்டது உண்டா என கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அவர்.. நிறைய தடவை திருட்டுதனமா வேலை செஞ்சிருக்கேன் என கூறினார். நான் விஜயின் அழகிய தமிழ் மகன் படத்தின் CD வாங்கிட்டு வந்து அஞ்சு, ஆறு தடவை போட்டு பார்த்தேன்.

அதை புத்தகத்தில் மறைத்துக் கொண்டு போய் என் தோழிகளுக்கு கூட கொடுத்து இருக்கிறேன் அந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்து என்னை வெளுத்து கட்டினார்கள். அது மட்டுமல்லாமல் நான் இரவு நேரங்களில் எல்லோரும் தூங்கிய பின் என்னுடைய பாய் பிரண்டுக்கு பெட்ஷீட் போத்திக்கொண்டு மெசேஜ் செய்திருக்கிறேன் அப்பொழுது ஃபோனில் வெளிச்சத்தை கண்டுபிடித்த என்னுடைய அம்மா என்னை குமுறி எடுத்துட்டாங்க ஏன்னா வெளிப்படையாக கூறியுள்ளார்.