பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஐக்கி பெர்ரி மற்ற போட்டியாளர்கள் குறித்து பேசிய சுவாரசியமான தகவல்.! பிரியங்காவை பத்தி அவர் சொல்ல வரும் விஷயம் என்ன..

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது 50 நாட்களை தாண்டி நிலையில் பல்வேறு போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் புதிதாக இரண்டு போட்டியாளர்கள் வைல்ட் கார்டு மூலம் உள்ளே வந்துள்ளனர் கடைசியாக மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டுகளை  வாங்கி வெளியேறினார் பிரபல ராப் பாடகி ஐக்கி பெர்ரி.

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் தனியாக தெரிந்த இவர் நாட்கள் செல்ல செல்ல இவர் மற்றவர்களுடன் நன்றாக பிறகு பழக ஆரம்பித்தார் மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பது ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்தது ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் போகப்போக இவரது திறமையை கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது மேலும் மக்கள் மத்தியில் இவர் பெருமளவு கவர்ந்த எடுக்கப்படாததால் ஐக்கி பெர்ரி வெளியேற்றப்பட்டார்.

ஆனால் அவர் யாருடனும் அவ்வளவாக சண்டை போடுவது கிடையாது அப்படி சண்டை போட்டு வந்தாலும் உடனே சமாளித்துக் கொண்டு அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நேர்மையாக விலகி வழி விடுவார்.  நேர்மையான போட்டியாளராக இருந்தால் தான் யாருக்குமே பிடிக்காது அதன் காரணமோ என்னவோ உடனடியாக வெளியேறினார் இது தற்போது பலரும் சோகத்தை கொடுத்துள்ளது.

ஐக்கி பெர்ரி தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார் அந்த வகையில் பிரியங்கா, தாமரை போன்ற ஒவ்வொருவரும் எப்படி பட்டவர்கள் எந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பது குறித்து அவர் பேசியுள்ளார். அதன் வீடியோ தற்போது இணையதளத்தில் கூட தீயாய் பரவி வருகிறது.

அதிலும் குறிப்பாக பிரியங்காவை பற்றி பேசிய ஐக்கி பெர்ரி சில விஷயங்களை பகிர்ந்து உள்ள அதில் அவர் கூற வருவது பிரியங்கா நல்ல குணம் உடையவர் ஆனால் உடனே எமோஷனல் என்ற இடத்தில் அவர் விழுந்து விடுகிறார் அதனால் தன் என்ன பேசுகிறோம் என்பதை மறந்து பேசுகிறார். இதோ ஐக்கி பெர்ரி பேசிய வீடியோ.

Leave a Comment