மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடிக்கும் வாய்ப்பை ரம்யா பாண்டியன் கைப்பற்றியது எப்படி தெரியுமா.? அவரே சொன்ன சுவாரசிய தகவல்.

ramya-pandian
ramya-pandian

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் பல்வேறு படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி இன்னும் ஓடிக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் மம்முட்டி. மம்முட்டி சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே மெகா ஹிட் என்பதால் தற்போது நடிக்க உள்ள  படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் இவர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி உடன் கைகோர்த்து ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அதை திரைப்படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது இந்த படத்திற்கு “நண்பகல் நேரத்து மயக்கம்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தை மம்முட்டி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த படத்தில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது இந்த படத்தில் எப்படி கமிட்டானார் என்பதை தனது பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியது : இயக்குனர் குழு மற்றும் மம்முட்டி ஆகியோர் ஜோக்கர் படத்தை பார்த்து உள்ளனர் அவர்கள் என்னுடைய நடிப்பு பிடித்திருந்தது.

மம்முட்டி என்னுடைய படத்தில் ரம்யா பாண்டியன் நடித்தால் சிறப்பாக இருக்கும் என விருப்பம் தெரிவித்தார் ஆனால் அப்பொழுது அது சாத்தியமாகவில்லை  அதன்பின் அவரது குழு பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை பார்த்துள்ளனர் அதன்பிறகு இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது முதலில் நான் படக்குழுவுக்கு புதிது என்பதால் மிகவும் அமைதியாக இருந்தேன்.

அதன் பிறகு மம்முட்டி மற்றும் படக்குழு என்னிடம் சிறப்பான உரையாடலை தொடங்கினர் அதிலும் குறிப்பாக நடிகர் மம்முட்டி  மிகவும் எளிமையான இனிமையான பணிவான மனிதர்  நகைச்சுவை உணர்வு கொண்டவர் படப்பிடிப்பின்போது பல விஷயங்களை நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம் என கூறினார்.