ஆரம்பத்தில் என்னுடைய குடும்பம் இப்படி ஒரு நிலைமையில் தான் இருந்தது – பேட்டியில் ஓபன்னாக சொன்ன வலிமை பட நாயகி ஹூமா குரேஷி.

ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. ஒரு வழியாக பல்வேறு தடைகளைத் தாண்டி வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது இந்தியாவில் மட்டும் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகிறது.

வலிமை படத்துக்கான முன்பதிவு புக்கிங் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தயாரிப்பாளர் போனிகபூர்,  இயக்குனர் ஹச். வினோத் மற்றும் படத்தில் பணியாற்றிய பிரபலங்களான கார்த்திகேயா, ஹேமா குரேஷி போன்ற பலரும் வலிமை படத்திற்கான பிரமோஷன் வேலைகளை தொடங்கி உள்ளனர்.

ஏனென்றால் அஜித் படங்களுக்கு எப்போதுமே இசைவெளியீட்டுவிழா, ப்ரோமோஷன் பண்ணுவதற்கான எந்த வேலையும் கிடையாது இந்த மாதிரி பேட்டிகளின் மூலம் வலிமை பற்றியும் அஜித்தை பற்றி பேசி பரப்பி வருகின்றனர் இதுவே ஒரு பிரமோஷன்னாக பார்க்கப்படுகிறது.

அப்படி சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை ஹுமா குரேஷி அஜித் குறித்தும், வலிமை படம் குறித்தும் பேசி வந்தார் அப்போது அவரது வாழ்க்கை குறித்தும் பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது வலிமை படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய பாக்கியம் அதிலும் குறிப்பாக அஜித் போன்ற ஒரு ஜென்டில்மேன் உடன் இணைந்து நடித்தது வேற லெவல்.

ஒரு நடிகையாக நான் பெருமையாக உணர்கிறேன். சினிமா உலகில் நடிகையாக ஆவதற்கு முன்பால்  ஆரம்ப காலகட்டத்தில் நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள் அதனால் பல பிரச்சனைகளை சந்தித்து படிப்படியாக இந்த இடத்தை எட்டி உள்ளேன் எனது அப்பா ரெஸ்டாரன்ட்டில் வியாபாரம் செய்துள்ளார்.

அம்மா வீட்டில் எங்களை பார்த்துக் கொள்வார்கள். ஒரு குறிப்பிட்ட வயதில் இருந்தே எனக்கு நடிகையாக வேண்டும் என அந்த ஆசையும் கனவும் இருந்தது அது தற்போது நிறைவேறியுள்ளது கூறினார் நடிகை ஹூமா குரேஷி.

Leave a Comment