முகேனும் ஷிவானியும் இணைந்து நடிப்பது போன்ற தகவல்!! பொய் என மறுத்துள்ள முகேன் ராவ்!!

0

பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு வெற்றி பெற்று டைட்டில் வின்னர் ஆனவர் முகேன் ராவ். இவர் தனது கடின உழைப்பாலும  விடாமுயற்சியாலும் மற்றவரிடம் மிக எளிமையாக அன்புடன் பழகியதாலும் இந்த சீசனில் இவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரை மலேசிய பாப் இசை பாடகர் என அனைவரும் அழைப்பார்கள். இவர் பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, இசை அமைப்பது, நடிப்பது என அனைத்து திறமையும் கொண்டவர். அதுமட்டுமல்லாமல் இதற்கு முன் இவர் மாடலிங்கும் செய்துள்ளார்.

முகேன் ராவ் நீதான் நீதான் என்ற பாடல் மூலம் பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் சில நாட்களாக சீரியல் நடிகை சிவானி நாராயணனும் இவரும் இணைந்து படம் நடிக்க போவதாக  செய்திகள் வெளியாகி வந்தன அதனை முகேன் மறுத்துள்ளார்.

மேலும் தற்போது முகேன் ராவ் வெப்பம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர்  அஞ்சனா அலிக்கானுடன் இணைந்து தனது இரண்டாவது திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் இவர் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். இவர் ஷிவாணியுடன் இணைந்து நடிக்க போவதாக இருந்தாலும் அவரே அந்த தகவலை வெளிப்படுத்துவார் என கூறியுள்ளார்.