2 மடங்கு லாபம் பார்த்த விஷால், எஸ்.ஜே சூர்யாவின் மார்க் ஆண்டனி.. வசூல் எத்தனை கோடி தெரியுமா?

Mark Antony Box Office: விஷால் எஸ். ஜே சூர்யா கூட்டணியில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் உலகம் முழுவதும் ரூபாய் 100 கோடியை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலங்களாக விஷால் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் கலவை விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாகவும் தோல்வினை சந்தித்து வந்தது.

ஆனால் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் இந்த நிலையில் இருந்து மாறியுள்ளார். அப்படி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க மினி ஸ்டுடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ளார்.

விஷால், எஸ்.ஜே சூர்யாவை தொடர்ந்து ரித்து வர்மா ஹீரோயினாக கலக்கியிருந்த நிலையில் இப்படம் டைம் ட்ராவலை அடிப்படையாக வைத்து உருவானது. எஸ்.ஜே சூர்யா மற்றும் சில்க் ஸ்மிதா போன்ற கேரக்டர்களின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை பெரிதளவிலும் ஈர்த்தது. பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியான முதல் 5 நாட்களில் ரூபாய் 50 கோடி வசூல் செய்தது.

தற்பொழுது வரையிலும் படம் வெளியாகி 19 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில் உலக அளவில் ரூபாய் 100 கோடி வசூலை எட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படம் சமீபத்தில் ஹிந்தியில் வெளியிடப்பட்டதனை தொடர்ந்து திடீரென இதற்காக விஷால் லஞ்சம் கொடுக்க தயாராக இருந்ததாக புதிய பிரச்சனை உருவாகியது.

ஆனால் இந்த விமர்சனங்களால் மார்க் ஆண்டனி படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. அப்படி மார்க் ஆண்டனி படம் மொத்தம் ரூபாய் 35 கோடி பட்ஜெட்டில் உருவானதை தொடர்ந்து உலகளவில் ரூ.100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது படக் குழுவினர்களுக்கு நல்ல லாபத்தை பெற்றுத் தந்துள்ளது. இதனால் படக் குழுவினர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.