இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறியவர் அனன்யா கிடையாதாம்? இறுதியில் எவிக்ஷனான போட்டியாளர் இவர்தான்..

Bigg Boss 7: விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி இருக்கும் நிலையில் தொடர்ந்து நாள்தோறும் சுவாரசியமான நிகழ்வுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி போட்டியாளர்களும் முதல் வாரமே போட்டி போட்டு கொண்டு அடித்துக் கொள்ளாத ஒரு குறைக்கு விளையாடி வருகின்றனர்.

அப்படி இந்த வாரம் ஜோவிகா, விசித்ரா இவர்களுடைய பிரச்சினை தான் சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. எனவே இதற்காக கமலஹாசனும் இந்த பிரச்சனையை கையில் எடுத்த நிலையில் அது குறித்த ப்ரோமோக்களும் வெளியானது.

இவ்வாறு ஆண்டவர் விசித்ரா ஜோவிகாவில் யாருக்கு  சாதகமாக பேசுவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வந்தனர். இதனை அடுத்து யார் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலிருந்து முதல் போட்டியாளராக வெளியேறப் போகிறார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் எந்த போட்டியாளர்களும் வெளியானது கிடையாது ஆனால் இந்த சீசனில் வெளியேற போகின்றனர்.

bigg boss 7
bigg boss 7

இந்த வார நாமினேஷனில் பவா செல்லத்துரை, அனன்யா, பிரதீப் ஆண்டனி, ஜோவிகா, ரவீனா, ஐசு, யுகேந்திரன் ஆகியோர் சிக்கினார். இவர்களில் மிகவும் சுவாரசியம் குறைந்தவராக அனன்யா கருதப்பட்டதால் இவர்தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என கூறப்பட்டது.

ஆனால் இவர் வெளியேறவில்லையாம் மக்கள் மத்தியில் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று இறுதி கட்டத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு யுகேந்திரன் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு இதற்கான எபிசோட் இன்று இரவு வெளியாகும் பொழுது யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் என்பதை உறுதியாக தெரிந்துக் கொள்ளலாம்.