இந்தியன் 2 பிரச்சனை தர்பார் செட்டில்மெண்ட் தாமதம்.! ரஜினி வீட்டிற்கு சென்றாலும் நோ யூஸ் தலையில் அடித்துக்கொண்ட விநியோகஸ்தர்கள்.!

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தால் தர்பார் படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் தரப்பில் கூறப்படுகிறது, அதனால் ஊரடங்கு காலத்திலும் ஊதியம் வழங்க முடியவில்லை என திரையரங்க உரிமையாளர்கள் தங்களுக்கான டெபாசிட் தொகையை வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.

கொரனோ ஊரடங்கிற்கு முன்பாக வெளியான சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை அதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியது, அந்த லிஸ்டில் குறிப்பாக லைக்கா நிறுவனம் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய தர்பார் திரைப்படம் தான் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் தான் தயாரித்திருந்தார், இந்த திரைப்படம் விநியோகஸ்தர் தரப்பில் பிரச்சினை எழுந்தது யூனியன் வரை இந்த பிரச்சினையை கொண்டு சென்று டி ராஜேந்திரன் முன்னிலையில் குறித்த இழப்பீட்டை தரவேண்டுமென லைக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டது. ஆனாலும் தர்பார் பிரச்சனை விநியோகஸ்தர்களுக்கும் முடிவு பெறவில்லை, அப்படி இருக்கும் நிலையில் தியேட்டர்களும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ஒரு திரைப்படம் இரு முறைகளில் வெளியிடப்படுகிறது மினிமம் கியாரண்டி என்ற முறையிலும் டெபாசிட் முறையிலும் தான் படங்களை வெளியிட்டு வருகிறார்கள் விநியோகஸ்தர்கள், அந்த வகையில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள் அதனால் டிபாசிட் முறையில் தியேட்டர் உரிமையாளர்கள் வாங்கி விடுகிறார்கள்.

ஆனால் அப்படி வாங்கும் திரைப்படம் தோல்வியைத் தழுவும் போது தியேட்டர் உரிமையாளர்கள் செய்யும் டெபாசிட் தொகையை விநியோகஸ்தர்கள் வழங்குவார்கள் ஆனால் தர்பார் படத்தில் விநியோகஸ்தர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு டெபாசிட் தொகையை வழங்க முடியவில்லை, இப்படி ஒரு சிச்சுவேஷன் வரும்பொழுது அடுத்து  படத்தை வைத்து விநியோகஸ்தர்கள் சமாளித்துக் கொள்வார்கள் ஆனால் கொரோனா தோற்று ஊரடங்கு காரணமாக எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாததால் தியேட்டர்களுக்கு செய்ய வேண்டிய டெபாசிட் தொகை இன்னும் செய்ய முடியாமல் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் மூன்று மாதங்களுக்கு மேல் திரையரங்கள் திறக்கப்படாததால் திரையரங்கு உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் தருவதே சவாலான விஷயமாக இருக்கிறது, இந்தநிலையில் மதுரையை சேர்ந்த திரையரங்க உரிமையாளர் இடம் தொலைபேசியில் பேசியபோது தங்களுக்கு 20 லட்சம் வரை பாக்கி இருப்பதாகவும் மொபைலில் தொடர்பு கொண்டால் அழைப்பை ஏற்க மாட்டார்கள் எனவும் வேதனை தெரிவித்துள்ளார்கள்.

அதனால் அடுத்தடுத்த படங்கள் வெளிவராமல் ஊழியர்களுக்கு பணம் தராமல் தங்கள் ஊதியம் வழங்க கூட பணம் இல்லாமல் சிரமப்பட்ட வருவதாக கூறுகிறார் மதுரை திரையரங்கு உரிமையாளர் ஒருவர், 40 வருடங்களாக திரையரங்கை மட்டுமே நம்பியிருந்த எனக்கு இந்த சோதனை காலம் கடும் சிரமத்தை தருவதாகவே தன்னிடம கூறியுள்ளார் ப்ரொஜெக்டர் ஆப்பரேட்டர், மதுரை திரையரங்க உரிமையாளர்  இந்த பிரச்சனை பற்றி கூறியதாவது இந்த திரைபடத்தின் மதுரை விநியோகஸ்தர் வினோத்திடம் கேட்டபோது லைக்கா நிறுவனம் தருவதாக கூறிய தொகை இன்னும் வழங்கப்படவில்லை.

இந்தியன் 2 படத்தில் ஏற்பட்ட விபத்தால் சிரமத்தில் இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பு கூறுகின்றனர் ரஜினி வீடு வரை சென்றும் பயனில்லை என்று புலம்பும் அவர் வாங்கிய கடனுக்காக தயாரிப்பாளர்கள் OTT தளத்தில் படத்தை ரிலீஸ் செய்வதால் அடுத்த அவர்கள் எப்பொழுது படமெடுத்து எங்களுக்கு கொடுத்து அதை நாங்கள் எப்படி வியாபாரம் செய்யப் போகிறோம் என்பதே தெரியவில்லை என கூறியுள்ளார், இந்தியன் 2 தர்பார் படத்தின் தியேட்டர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் விநியோகஸ்தர்களிடம் இருந்து வரவேண்டிய தொகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

Leave a Comment