லூட்டி அடித்த இந்திய அணியினர் இது தேவையா என கேட்ட ரசிகர்கள்.! விவரம் இதோ!!

ஒருநாள் போட்டியில் தொடரை இழந்த இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ளது. நியூசிலாந்தில் தூய்மையான நீர் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படும் புட்டாரருரூ பகுதியில் இந்திய அணியினர் பயணம் மேற்கொண்டனர். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணியினர் T-20 தொடரை வென்று நியூசிலாந்தை தன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்து பெருமை அடைந்தது இதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டியில் இந்தியா வெல்லும் என்ற முனைப்பில் களமிறங்கியது.

ஆனால் நியூசிலாந்து அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக நியூசிலாந்து அணி ஒருநாள் போட்டியில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை பழிதீர்த்தது நியூசிலாந்து. மூலம் இவ்விரு அணிகளும் தலா ஒவ்வொரு தொடரையும் வென்றுள்ளது. இந்தநிலையில் இந்திய அணி வருகின்ற 21 ஆம் தேதி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது இந்த நிலையில் இவர்கள் பயணம் மேற்கொண்டு உள்ளனர். இவர்கள் இதற்கு முன்பு பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி டெஸ்ட் தரவரிசையில் 4-ஆவது இடத்திலுள்ளது. இந்திய அணிக்கு சற்று கூடுதல் பலம் இருந்தாலும் நியூ தனது சொந்த மண்ணில் விளையாடும்போது பெரும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த டெஸ்ட் போட்டி மிக முக்கியமான வாய்ந்ததாக இருக்கும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் வருகின்ற உலக கோப்பை டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் விளையாட்டு போட்டி வெல்வதன் மூலம் புள்ளிகள் வழங்கப்படும். இதன் மூலம் அதிக புள்ளிகள் எடுப்பவர்கள் ஐசிசி உலக கோப்பையில் விளையாடுவார்கள் என தகவல் தெரிவிக்கின்றன.

india
india

இந்தநிலையில் நியூசிலாந்தில் புட்டாருரூ ப்ளூ ஸ்ப்ரிங்கசில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். சுற்றுலாவில் இந்திய அணியினர்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இந்த போட்டோக்களை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியுட்டுள்ளது. இந்த சுற்றுலாவில் புஜாரா, அஸ்வின், பிரதீஷா, பும்ரா, சகல், ரிஷப் பந்த், மயங்க் அகர்வால் போன்றோர் இடம்பெற்றிருந்தனர்.

india
india
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment