தொடர்ந்து பல வருடங்களாக உலகில் மிகவும் அழகான பெண்கள் இவர்கள் தான் எனக்கூறி ஒரு பட்டியலை வெளியிடுவதை லண்டனைச் சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜியன் Julian De Siva வருடம் தோறும் இந்த பட்டியல் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும் ஒவ்வொருவரின் முக வடிவமைப்பை scientific method பயன்படுத்தி ஆராய்ந்து யாருடைய முகம் பர்ஃபெக்ட்டாக இருக்கிறது என்பதை குறித்து பட்டியலை உருவாக்குகிறார்.
அதில் கண், காது, மூக்கு முக அமைப்பு மொத்தம் 12 விஷயங்கள் ஆராய்ந்து கிரேக்கர்களின் கோல்டன் ரேடியோ ஆப் பியூட்டி Phi உடன் ஒப்பிட்டு வருடம் தோறும் இந்த பட்டியலை அந்த டாக்டர் ரிலீஸ் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த 12 விஷயங்களில் எந்தெந்த நடிகைகளுக்கு அதிகம் ஒத்துப் போகிறதோ அவரை முதலிடத்தை பிடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது ஜூலியன் டி சிவா இந்த வருடம் வெளியிட்டிருக்கும் லிஸ்டில் டாப் 10 பட்டியலில் ஒரே ஒரு இந்திய நடிகை மட்டுமே இடம் பெற்று இருக்கிறார் அது வேறு யாருமில்லை தீபிகா படுகோன் தான். இதனைத் தொடர்ந்து இந்த வருடம் ஹாலிவுட் நடிகை jodie Comer தான் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.
இவருடைய முகம் 94.5% கோல்டன் ரேடியோ ஆப் பியூட்டிவுடன் ஒத்துப் போய் இருப்பதாகவும் கூறியுள்ளார் டாக்டர். இவரைத் தொடர்ந்து Zandaya அவர்களின் முகம் 94.37 சதவீதம் ஒத்துப்போவதாகவும் அந்த வகையில் இவர் இரண்டாவது இடத்தினை பிடித்திருக்கிறார். பிறகு மாடல் Bella Hadid 94.35% ஒத்துப்போவதாகவும் இவர் மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளார்.
Beyonce 92.44 சதவீதத்தை பெற்று நான்காவது இடத்தையும், Ariana Grande 91.81% பெற்று ஐந்தாவது இடத்தினை பிடித்துள்ளார். Taylor Swift 91. 64 சதவீதத்தினை பெற்று ஆறாவது இடத்தினையும், Jourdan Dunn 91.39 சதவீதத்தினை பெற்று ஏழாவது இடத்தையும், Kim Kardashian 91.28% எத்தனை பெற்று எட்டாவது இடத்தையும், Deepika Padukone 91.22% பெற்று 9ஆவது இடத்தினையும், Hoyeon jung 89.63 சதவீதத்தினை பெற்று பத்தாவது இடத்தையும் பிடித்திருக்கிறார் இவ்வாறு உலகில் மிகவும் அழகான பெண்கள் என்ற பட்டியலில் இந்த பத்து அழகான பெண்களும் இடம் பிடித்து இருக்கிறார்கள்.