இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு.!

indian-2
indian-2

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த இவர் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

நான்கு ஆண்டுகளாக அரசியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிசியாக இருந்து வந்த நடிகர் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்த அடுத்ததாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் அவர்கள் மாதம் 10 நாட்கள் மட்டும் கால் சீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் சங்கர் அவர்கள் தற்போது ஒரே சமயத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார்கள் இதற்காக இரண்டு அணிகளை தேர்ந்தெடுத்து அவர்களை வைத்து காய் நகர்த்தி வருகிறார். ஆம் தற்போது கமல் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தையும் தெலுங்கில் ராம்சரனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் சங்கர்.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதால் கமல்ஹாசனை வைத்து சரிவர படங்களை இயக்க முடியாமல் போய் வருகிறது. இதனால் அவர் எடுத்த முடிவு தற்போது பல திருப்பங்களைக் கொண்டு சேர்த்தது அது மட்டுமல்லாமல் இந்தியன் 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நவரச நாயகன் கார்த்திக் அவர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் ஆக அமைந்துள்ளது.

மேலும் இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளி அன்று திரையில் வெளிவர காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியேறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது இதனால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.