இன்று மாலை 5: 30 மணிக்கு இணையதளத்தை சுத்தி சுத்தி அடிக்க போகும் இந்தியன் 2.. மரண மாஸ் அப்டேட்.!

Indian 2 Update :  பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்களை எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் இயக்குனர் ஷங்கர். இவர் இதுவரை ரஜினி, கமல், விஜய், அர்ஜுன் என டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான 2.0 மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பெரிய சாதனை படைத்தது.

அதனைத் தொடர்ந்து தெலுங்கில் டாப் நடிகராக வலம் வரும் ராம் சரணை வைத்த கேம் சேஞ்சர் படத்தை உருவாக்கி வருகிறார். ரொம்ப நாள் கிடப்பில் இருந்த இந்தியன் 2 திரைப்படத்தையும் தூசு தட்டி தற்போது எடுத்து வருகிறார் இரண்டு படங்களிலும் பிசியாக ஓடிக் கொண்டிருக்கிறார்.

ஜீவானந்தம் சரிவதை பார்த்து என் பொண்டாட்டி கதறி அழனும்.! குணசேகரன் மிரட்டலுக்கு பயந்து நிற்கும் அப்பத்தா…

இப்படி இருந்தாலும் இந்தியன் 2 படத்திற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். இதில்  கமல் (சேனாதிபதி) 90 வயது கிழவனாக நடிக்கிறார் அவருடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரித் சிங், ப்ரியா பவானி சங்கர், காளிதாஸ் ஜெயராமன், சமுத்திரகனி, பாபி சிம்ஹா..

டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், ஜார்ஜ் மரியன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் படத்தில் நடித்து வருகின்றனர் 250 கோடி பட் செட்டில் உருவாகி வரும் இந்த திரைப்படம்  ரிலீஸ் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை..

லியோ வெற்றி விழாவில் விடாமுயற்சி அப்டேட் கொடுத்த நடிகை த்ரிஷா.? இது போதும் எங்களுக்கு..

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மதியம் 5 : 30 மணிக்கு ஒரு அப்டேட் வரும் என புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார். இதனால் கமல் ரசிகர்கள் ஒருவேளை இந்தியன் 2 டீசர் அல்லது டிரைலர் வரும் என சொல்லி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.