பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம் இணையதளத்தை மிரள வைக்கும் இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பார்ட் வீடியோ.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் உலகநாயகன் கமலஹாசன், இவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3-யை  தொகுத்து வழங்கினார், இந்த நிலையில் கமலஹாசன் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது, படத்தில் சித்தார்த், சதீஷ், விவேக், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் என பலர் நடித்து வருகிறார்கள்..

மேலும் படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி சிட்டியில் நடைபெற்று வருகிறது, இந்தியன் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்ற மிகப்பெரிய வெற்றியடைந்ததை அடுத்து தற்போது இந்தியன்2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்கள்.

https://twitter.com/Indian_II/status/1225988992056717312

இந்தநிலையில் சூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் சில இணையதளத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் இந்தியன் 2 படத்திற்காக மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள் படக்குழு.

https://twitter.com/Indian_II/status/1225968786534060033

Leave a Comment