கண்பார்வையாலேயே எதிரிகளை மிரட்டும் “கமல்”.. இந்தியன் 2 படத்திலிருந்து வெளியான போஸ்டர்

Indian 2 : நடிப்பிறகு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு நான்கு வருடங்கள் தென்படாமல் இருந்த இவர் லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்தார்.

அந்த படம் வெளிவந்து 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. அதனை தொடர்ந்து கமலுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது இதனால் அடுத்த மூன்று வருடத்திற்கு பிஸியான ஹீரோவாக தென்படுகிறார். முதலில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தை தான் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கின்றனர்.

ஏனென்றால் இதனுடைய முந்தைய பாகம் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், ராகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்தியன் 2 படத்தின் இறுதி கட்ட வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் 2 படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது அதை வைத்து பார்க்கும் போது கமலுக்கு இந்த படத்தில் குறைந்தது 90 வயது இருக்கும் என கூறப்படுகிறது புகைப்படத்தில் அவருடைய லுக் பயங்கர மிரட்டலாக இருந்தது.

கண் பார்வையிலேயே எதிரிகளை பயம் முறுத்துவது போல் இருக்கிறது இந்த புகைப்படம் தற்பொழுது கமல் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் கொடுத்துள்ளது நிச்சயம் இந்தியன் 2 ஹிட் அடிக்கும் எனக் கூறிய கமெண்ட் அடித்தும் வருகின்றனர் இதோ இந்தியன் 2 படத்திலிருந்து வெளிவந்த புதிய போஸ்டரை நீங்களே பாருங்கள்.

indian 2
indian 2

Leave a Comment