இந்தியன் 2 படத்தில் இணைந்த பிரபல காமெடியன்.! அதுவும் முதல் முறையாக

0

1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் இந்தியன் இந்த திரைப்படத்தில் கமலுடன் இணைந்து மனிஷா கொயராலா, ஊர்மிளா, சுகன்யா ஆகியோர்கள் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது இயக்கி வருகிறார்கள்.

‘இந்தியன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி இணைந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இதுவரை கமலுடன் நடிகர் விவேக் இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.