இறப்பிற்கு பிறகாவது விவேக்கின் ஆசையை நிறைவேற்றுவாரா இயக்குனர் சங்கர்.? ‘இந்தியன் 2’ படக்குழு எடுத்த முடிவு..

0
vivek
vivek

தமிழ் திரைவுலகில் முன்னணி காமெடி வலம் வந்த நடிகர் விவேக் மறைந்த நிலையில் இவருடைய கடைசி ஆசையை இயக்குனர் சங்கர் நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. நடிகர் விவேக் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கும் நிலையில் ஆனால் கமலஹாசன் உடன் ஒரு படத்தில் கூட நடிக்க முடியாமல் இருந்து வந்தது. எனவே எப்படியாவது கமலஹாசன் அவர்களுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என பல மேடைகளில் விவேக் கூறியிருந்தார்.

அந்த வகையில் இவருடைய கனவை நிறைவேற்றும் வகையில் தான் இவருக்கு இந்தியன் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் திடீரென படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது ஏனென்றால் இந்த விபத்தில் உயிர் சேதமும் ஏற்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த நேரத்தில் நடிகர் விவேகம் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார் எனவே சில காலங்கள் கழித்து மீண்டும் இந்தியன் 2 திரைப்பட பிடிப்பு தொடங்கிய நிலையில் விவேக் நடித்திருந்த காட்சிகள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறி வந்தனர் மேலும் விவேக் நடித்த காட்சிகளில் வேறு ஏதாவது நடிகர் நடிப்பார்கள் என கூறப்பட்டது.

இவ்வாறு நடிகர் கமலுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்ட விவேக்கின் ஆசையை இயக்குனர் சங்கர் இந்தியன் 2 படத்திலாவது நிறைவேற்றுவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விவேக்கின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக இந்தியன் 2 படத்தில் விவேக்கின் காட்சிகள் இடம்பெற பட குழுவினர்கள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இதன் காரணமாக விவேக் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் கொடுப்பதற்காக கலைஞர்களை பட குழுவினர்கள் தேடி வருகின்றனர். இவ்வாறு விவேக் அவர்களுடைய ஆசையை இழப்பிற்குப் பிறகு நிறைவேற இருப்பது மக்கள் மத்தியில் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்திய உள்ளது.