இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து.! காஜல் அகர்வால் எடுத்த அதிரடி முடிவு.! அதிர்ச்சியடைந்த படக்குழு.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள பூந்தமல்லியில் ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்றுவந்தது, இந்த படப்பிடிப்பின்போது படப்பிடிப்புக்கு தேவையான செட் அமைக்கும் பணி நடைபெற்றது அதில் ராட்சச விளக்கை கிரேன் கொண்டு தூக்கினார்கள் அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் ரோப் அறுந்து விழுந்தது.

அதில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது படப்பிடிப்பில் உள்ள அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, அதுமட்டுமில்லாமல் பலரும் இந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்கள், 3 பேர் உயிரிழந்தது மட்டுமல்லாமல் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

படப்பிடிப்பில் நடைபெற்ற இந்த கோர விபத்தை நேரில் பார்த்தவர் காஜல்அகர்வால், இந்த விபத்து நடப்பதற்கு முன்பு காஜல் அகர்வாலிடம் சில நிமிடங்களுக்கு முன்புதான் பேசிக் கொண்டிருந்தார்களாம், இந்த மூவரும் காஜல் அகர்வால் கண் முன்னே இறந்துள்ளார்கள் இது காஜல் அகர்வால் மனதை பெருமளவில் பாதித்துள்ளது. விபத்து நடந்த பின்பு வீட்டிற்கு சென்ற காஜல் அகர்வால் வீட்டை வெளியே எங்கும் செல்லாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்ட அவர் இன்னும் இரண்டு வாரத்திற்கு படப்பிடிப்பிற்கு என்னால் வரமுடியாது என கண்டிஷனாக கூறியுள்ளார், ஆனால் இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் அகர்வால் நடித்து வந்த காட்சிகள்தான் தற்பொழுது படமாக்கப்பட்டு வந்தது, இந்தநிலையில் காஜல் அகர்வால் இரண்டு வாரங்களுக்கு படப்பிடிப்புக்கு என்னால் வர முடியாது என கூறியது படக்குழுவிற்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Leave a Comment