பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம் 200 கோடிக்கு விலை போன இந்தியன் 2 OTT உரிமம்.! தலைவர்ன்னா சும்மாவா.?

Indian 2 OTT Rights : கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக இருந்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தற்பொழுது பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை OTT இணையதளம் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் தற்போது இந்தியன் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியாகிய இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை முன்னணி சர்வதேச OTT இணையதளம் பெருந்தொகைக்கு வாங்கியுள்ளது, இந்தியன் 2  திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை 200 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்தியன் 2 ஷங்கர் இயக்கிய இந்த திரைப்படத்தில் கமலஹாசன் அவர்களுடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத், ப்ரியா பவானி சங்கர், குரு சாமசுந்தரம் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் அவர்கள் தான் இசையமைத்துள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் விரைவில் திரையரங்கில் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது அப்படி இருக்கும் நிலையில் இந்தியன் 2 திரைப்படத்திற்கு பிறகு கமலஹாசன் தன்னுடைய அடுத்த திரைப்படமான KH 233 என்ற திரைப்படத்தில் வினோத் அவர்களுடன் இணைய இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் KH 234 மணிரத்தினம் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் விரைவில் அஸ்வினின் கல்கி 2898 கிபி என்ற திரைப்படத்திலும் கமலஹாசன் அவர்கள் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தில் பிரபாஸ் தீபிகா படுகோனே அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது அது மட்டும் இல்லாமல் நடிகர் கமலஹாசன் மகேஷ் நாராயணன் பெயரிடாத படத்திலும் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment