இறந்தவர்களை நேரில் கண்டு மனம் உருகிய படக்குழுவினர்.! வைரலாகும் வீடியோ!!

உலகநாயகன் கமலஹாசன் தற்பொழுது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்தியன் 2 திரைப்படத்தில் படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணி நடைபெற்றது அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் துடிதுடித்து இறந்தனர் இந்த சம்பவம் சினிமா துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியன்-2 படப்பிடிப்புக்காக சென்னை அருகில் உள்ள பூந்தமல்லி நசரத்பேட்டை உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்றது அப்போது ராட்சத விளக்குகள் கிரேன் மூலம் பொருத்தப்பட்டது.

அப்பொழுது வெயிட் தாங்காமல் கிரேன் கம்பி அறுந்து விழுந்தது இந்த விபத்தில் உதவி இயக்குனர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா உதவி நடன இயக்குனர் சந்திரன் ஆகியோர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் பத்துக்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி அளித்து வருகிறார்கள்.இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தை பற்றி விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மருதுவமனையில் அவர்களது உடல் பரிசோதனை செய்யப்பட்டு வெளி வரும் காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த படக்குழுவினர் மிகவும் மன வருத்தத்தில் உள்ளனர்.

Leave a Comment