நாங்கதான் எப்பவும் கிங் என நிருபித்த இந்தியா.!

0
world cup
world cup

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி செமி பைனல் தேர்வாகியுள்ளது, இதன் மூலம் செமி  பைனலுக்கு தேர்வாகும் இரண்டாவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது, இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வெல்லும் என பலர் கருத்துக்களை வெளியிட்டார்கள், அதேபோல் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது, குறிப்பாக ஆஸ்திரேலியா இங்கிலாந்து என பெரிய அணிகளையும் மிக எளிதாக வெற்றி பெற்று விடுகிறது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் இந்திய போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது, முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 314 ரன்கள் எடுத்திருந்தது, இந்திய அணியில் ரோகித் சர்மா 104 ரன்களும் ராகுல் 77 ரன்கள் எடுத்து இருந்தார்கள், 315 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது பங்களாதேஷ் அணி ஆனால் 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அதனால் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.