இந்திய அணியில் 4 வது இடத்தில் இவர் தான் ஆட வேண்டும்.! சூப்பர் வீரரை பரிந்துரைக்கும் பிசிசிஐ அதிகாரி

0
ravishastri
ravishastri

உலக கோப்பை போட்டிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி தீவிர பரிசோதனை முயற்சிகளை செய்யப்பட்டன, இந்திய அணியில் மிகப்பெரிய பலவீனம் என்றால் மிடில் ஆர்டர் தான், இதனை பலப்படுத்த பல பரிசோதனைகள் செய்யப்பட்டன, கடந்த இரண்டு ஆண்டுகளாக 4 ஆம் வரிசையை பூர்த்தி செய்ய பல இந்திய வீரர்களை இறக்கி பரிசோதித்தார்கள்.

அதில் ரகானே, ஸ்ரேயாஸ் ஐயர், ரெய்னா, மணிஷ் பாண்டே, அம்பாதி ராயுடு என பலர் அந்த வரிசையில் இறக்கப்பட்டார்கள், ஒருவழியாக அம்பத்தி ராயுடு அந்த இடத்திற்கு உறுதி செய்யப்பட்டார், கடந்த ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின்னர் நான்காம் வரிசை வீரர் கண்டறியப்பட்டதாக கடந்த ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பின்னர் விராட் கோலி தெரிவித்தார்.

உலகக் கோப்பை தொடருக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலிய தொடர் வரை அம்பத்தி ராயுடு அணியில் இருந்தார், ஆனால் கடைசி நேரத்தில் உலக கோப்பை அணியில் அம்பத்தி ராயுடுக்கு பதிலாக விஜய்சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார். உலக கோப்பை போட்டியில் மாற்று வீரர்கள் பட்டியலில் ராய்டு பெயர் இடம் பெற்றிருந்தது ஆனாலும் இரண்டு வீரர்கள் அடிபட்டாலும் அம்பத்தி ராயுடு அழைக்கவில்லை.

தவானுக்கு பதில் ரிஷப் பாண்டும், விஜய் சங்கருக்கு பதில் மயங்க் அகர்வாலும் அணியில் இறக்கப்பட்டார்கள், இந்திய அணியின் பெரிய பிரச்சனை மிடில் ஆர்டர் சரியாக இல்லாததால் இது எதிரணிக்கு தெளிவாக தெரியும் அதுதான் இந்தியாவின் பலவீனமாக இருந்தது, முதலில் ராகுல் நான்காம் வீரராகத்தான் களமிறங்கினார், தாவனுக்கு அடிபட்டதால் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினார் அதன்பிறகு நான்காம் வீரராக விஜய் சங்கர் இறக்கப்பட்டார் அவர் காயத்தால் விலகியதும் நான்காம் வரிசையில் ரிஷப் பாண்ட இறக்கப்பட்டார்.

இவர்கள் ஓரளவு பங்களிப்பு செய்தாலும் சரியாக விளையாடவில்லை மிடில் ஆர்டரில் என்று தான் கூற வேண்டும் அதனால் தான் இந்தியா அரையிறுதி உடன் வெளியேறியது, அதனால் இந்திய அணியில் நான்காம் வீரர் விவாதம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நான்காம் வரிசையில் ராஹானவை ஆட வைக்க வேண்டும் என பிசிசிஐ அதிகாரி சஞ்சய் ஜாக்தாலே கருத்து தெரிவித்துள்ளார். இதே கருத்தை சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.