இந்தியாவின் தோல்வி பற்றி முன்பே கணித்த பிரபல கிரிகெட் ஜாம்பவான்.!

0
india match
india match

நியூசிலாந்துக்கு எதிரான அதிரை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்வி பற்றி முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் முன்கூட்டியே கணித்தது வைரலாகி வருகிறது.

இந்த வருடம் உலகக் கோப்பையை கண்டிப்பாக வெல்லப்போவது இரண்டு அணிகள் தான் என்று முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் கூறியது இந்தியா மற்றும் இங்கிலாந்தை தான் ஆனால் இவர்கள் கூறியதில் இந்தியா அரையிறுதிப் போட்டியில் விளையாடி தோல்வி அடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

நியூசிலாந்து மற்றும் இந்தியா மோதிக்கொண்ட  போட்டி இரண்டு நாட்களாக நடந்திருக்கிறது முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி களமிறங்கியது இந்தியாவின் அபார பந்துவீச்சால் 47-வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது அதன் பின்பு மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபெற்றது.

தொடர் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது பின்பு ரிசர்வ் டேவில் மீண்டும் தொடரும் என அதிகாரபூர்வமாக அறிவித்து அன்றைய ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது, பின்பு அடுத்த நாள் தொடங்கிய ஆட்டத்தில் 8 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 239 ரன்கள் எடுத்திருந்தது.

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது ஆனால் இந்தியாவின் ஆட்டம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தது ஏனென்றால் ரோஹித், ஹோலி, ராகுல் என அனைவருமே ஒரு ரன்னில் வெளியேறினார்கள், சறுக்கிக் கொண்டே போன இந்திய அணியை ஜடேஜா மற்றும் தோனி தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓரளவு தூக்கி நிறுத்தினார்கள், ஆனால் ஜடேஜாவும் தோனியும் அவுட் ஆனதால் இந்தியா 221 ரன்களில் ஆல் அவுட் ஆனது அதனால் பைனலுக்கு போகும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

இந்தியாவின் தோல்வி பற்றி முன்கூட்டியே நாடி பிடித்து கூறியுள்ளார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நியூசிலாந்து விளையாடும் போது மழை குறுக்கிட்டதால் நீண்ட நேரம் கழித்து ரிசர்வ் டேவில் தள்ளிவைக்கப்பட்டது போட்டி இதைப்பற்றி பிரபல தொலைக்காட்சி விவாதிக்கப்பட்டது அப்பொழுது ஸ்ரீகாந்திடம் ரிசர்வ் ஆட்டம்  எப்படி இருக்கும் எனக் கேட்கப்பட்டது அதற்கு நியூசிலாந்திற்கு லக் என்று கூறலாம் என ஸ்ரீகாந்த் கூறினார்.

ஏனென்றால் மழை இல்லை என்றால் அன்றே இந்தியா வெற்றி பெற்றிருக்கும் ஆனால் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் மாறிவிடும், போக்கு மாறி விடும் அதனால் இந்தியாவுக்கு தோல்வி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, ஆட்டம் எப்படி வேணாலும் மாறலாம் என அவர் முன்பே கணித்து கூறியிருந்தார்.