ஒரு நாள் போட்டியில் இனி இவர்தான் கேப்டன்.? பிசிசிஐ அதிரடி.! அப்போ இனி கோலி கிடையாதா.?

0
kohli
kohli

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு சென்று தோல்வி அடைந்தது, அதனால் இந்திய அணியில் பல மாற்றங்கள் நடைபெற இருக்கிறது, இந்திய அணி வீரர்கள் மீது நடவடிக்கை எடுத்து வேற ஒரு புதிய அணியை நியமிக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் முக்கியமாக இந்திய அணியின் கேப்டனை மாற்றலாம் என பேச்சு அடிபட்டு வருகிறது.

இந்திய அணியில் மூத்த வீரர்களை ஓரங்கட்டிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக இந்திய அணியில் தோனி கோலி போன்ற மூத்த வீரர்கள் இல்லை அதற்கு பதில் புதிய வீரர்கள் களம் இறங்குவார்கள் என கூறுகிறார்கள்.

அதேபோல் ஒரு நாள் தொடரில்  கேப்டன் பதவிக்கு இனி கோலி கிடையாது ரோகித் ஷர்மாவை நியமிக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது, கோலி இனி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு கேப்டனாக இருப்பார், ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மா தான் கேப்டன் என ஆலோசித்து வருகிறார்கள், இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தோனிக்கு இனி அணியில் இடம் கிடையாது என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் அவருக்கு தற்போது வயது 38 ஆகும் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் இந்த நேரத்தில் தோனிக்கு வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது.