எதற்காக தோனியை பேட்டிங் செய்ய அனுப்பவில்லை ரவிசாஸ்திரியிடம் கோபப்பட்ட கோலி.? வைரலாகும் வீடியோ

0
virat-kohli
virat-kohli

நேற்று நடைபெற்ற நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிக்கான உலக கோப்பை போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் போராடி தோற்றது, இந்திய அணி ஆரம்பத்திலேயே ரோஹித், ராகுல், கோலி என அனைவரும் ஒரே ஒரு ரன்களில் அவுட் ஆனார்கள், விராட் கோலி அவுட் ஆனதும் எதிர்பாராத விதமாக இளம் வீரர் ரிஷப் பந்த் களமிறங்கினார்.

இதனையடுத்து தினேஷ் கார்த்திக் அவுட் ஆனதும் அடுத்ததாக தோனிதான்  இறங்குவார் என அனைவரும் எதிர் பார்த்தார்கள், ஆனால் பாண்டியா இறங்கினார், ரிஷப் பந்த் அவுட் ஆனவுடன் விராத் கோலி மிகவும் கோபமாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இடம் ஏன் தோனிக்கு பதில் பாண்டியாவை இறக்கினார்கள் என கோபப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஏழாவது வீரராக தான் தோனி களமிறங்கினார் அவருடன் ஜோடி சேர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பாக ஆடினார், ஆனால் தினேஷ் கார்த்திக் அவுட்டான உடன் ஏன் அனுபவமிக்க வீரரான தோனியை இறக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது அவர் இறங்கியிருந்தால், ரிஷப் பந்தை சிறப்பாக வழிநடத்தி இருப்பார் போட்டியின் முடிவும் மாறி இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் கருத்து தெரிவித்துள்ளார்கள்.