நீங்கள் செய்த அனைத்துமே தவறு தான்.! தாறுமாறாக கிழித்தெறிந்த கங்குலி.!

0
ganguly-kohli
ganguly-kohli

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது இதில் நாளை கடைசி போட்டி நடக்க இருக்கிறது இந்த போட்டியில் நியூசிலாந்து அணியும் இங்கிலாந்து அணியும் மோத இருக்கின்றன, இதில் எந்த அணி கோப்பையை வெல்லும் என நாளை தெரிந்துவிடும்.

அதேபோல் பிரபல ஜோதிடர் நியூசிலாந்து அணி தான் கோப்பையை வெல்லும் என இந்த வருடத் தொடக்கத்தில் கணித்துக் கூறியிருந்தார், மேலும் உலக கோப்பை போட்டியை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது இந்திய அணி தான், ஆனால் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோற்று போனது, முதல் 5 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது இந்தியா பின்பு rishabh pant களத்தில் இருந்த நிலையில் அனுபவம் உள்ள வீரர் தோனி அனுப்பாமல் தினேஷ் கார்த்திக்கை அனுப்பி மிகப் பெரிய தவறு செய்தார்கள், தினேஷ் கார்த்தி அவுட்டான பிறகாவது தோனியை இறக்கி இருக்க வேண்டும் ஆனால் அதை செய்யவில்லை.

தினேஷ் கார்த்தி விக்கெட் பிறகு பாண்டிய தான் இறங்கினார் ரிஷப் பாண்டியா இருவருமே இளம் வீரர்கள் தான் அதனால் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவர்களால் சமாளிக்க முடியாது அதனால் பெரிய ஷாட்டுக்காக முயற்சி செய்து அவுட் ஆனார்கள்.

இதுவே தினேஷ் கார்த்திக்கு பதிலாக தோனியை இறக்கியிருந்தால் விக்கெட்டை அழகாக தடுத்திருப்பார் தோனி போன்று அனுபவமுள்ள வீரர்களை இறக்காமல்  இப்படி செய்தது மிகப் பெரிய தவறு தான், தோனி இறங்கியிருந்தால் அழகாக ஆலோசனை கூறி பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார், இதுதான் ரசிகர்களின் ஆதங்கமும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் ஆதங்கமும்.

இதே கருத்தை தான் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார், இது குறித்து பேசுகையில் கங்குலி விக்கெட் போய் கொண்டிருந்த நிலையில் ஐந்தாமிடத்தில் தோனியை  இறக்கி இருக்கணும் அதை விட்டுவிட்டு தினேஷ் கார்த்திக்கை பாண்டியாவை இறக்கியது மிகப் பெரிய தவறு, தோனி இறங்கியிருந்தால் அடித்து ஆடுவதற்கு தினேஷ் கார்த்திக்கும் பாண்டியன் இருந்திருப்பார்கள் எனக் கூறினர் மேலும் ஷமியை எடுக்காதது மிகப்பெரிய தவறு என கூறியிருந்தார்.