தங்கமாக வாரிக்குவிக்கும் ஹிமா தாஸ்.! இந்தியாவை சேர்ந்த இவரை பாராட்டலாமே

0

மகளிர்க்கான சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடர் செக் குடியரசின் கிளாட்னோ நகரில் நடைபெற்றது, இதில் 200 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் முதலாவதாக வந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் 23.43 வினாடிகளில் 200 மீட்டர் பந்தய தூரத்தை முதன் முதலாக கடந்தார், அதேபோல் இதற்கு முன் போலாந்தில் ஜூலை 2ம் மற்றும் 7ம் தேதிகளில் நடைபெற்ற தடகள சாம்பியன்ஷிப் தொடர்களில் தங்கம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிமா தாஸ் சர்வதேச தடகளத்தில் இரண்டு வாரத்திற்குள் 3 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார், இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் இதனைத்தொடர்ந்து துருக்கியில் நடைபெற்ற யாசர் டோகு சர்வதேச மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் 53 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்க பதக்கம் வென்றார் நேற்று மோதிய வினேஷ் போகத் 9 -5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார்.