இந்திய அணியின் பயிற்சியாளர் இனி இவரா.? இது ரோஹித் ஷர்மா வேலையா இருக்குமோ ரசிகர்கள் ஒரே குஷி.!

0
rohit-sharma plane
rohit-sharma plane

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதி வரை சென்று நியூசிலாந்திடம் தோற்றது, உலக கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியும் நியூசிலாந்து அணியும் மோதிக்கொண்டன இதில் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணி அரையிறுதி போட்டியில் வெளியேறியதால், அணியில் பல அதிரடி மாற்றங்களை செய்ய இருக்கிறார்கள், மேலும் மூத்த வீரர்களை அணியிலிருந்து தூக்குவதற்கு பல திட்டங்கள் போட்டுள்ளார்கள், இந்த நிலையில் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பல முன்னணி ஜாம்பவான்கள் போட்டி போட்டு உள்ளார்கள், இந்த நிலையில் மீண்டும் ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தாலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது.

இந்த நிலையில் பிரபல இலங்கை முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஜெயவர்தனே பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது, மேலும் டாம் மூடி, கேரி கிறிஸ்டன், சேவாக், ஆகியோரும் விண்ணப்பித்துள்ளார்கள், இவர்களில் ஜெயவர்த்தனே பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தால் அதன் பின்னணியில் ரோஹித் ஷர்மா இருப்பதாக கூறப்படுகிறது, ஏனென்றால் ரோகித் சர்மா தலைவராக இருக்கும் மும்பை அணிக்கு பயிற்சியாளராக ஜெயவர்த்தன இருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் விராத் கோலியை ஒருநாள் போட்டி கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ரோகித் சர்மாவுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே கோலி கேப்டனாக இருந்தபோது அவருக்கு ஏற்றார்போல் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருந்தார், அதேபோல் ரோகித் சர்மாவுக்கு ஏற்றதுபோல் ஜெயவர்தனே நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, எது எப்படியோ ஜெயவர்த்தன இந்திய அணியின் பயிற்சியாளராக நியமித்தால் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.