இந்தியாவின் தோல்விக்கு தோனிதான் காரணமா.? ஏன் இப்படி செய்தார் கடுப்பில் இந்திய ரசிகர்கள்

0
India-s-MS-Dhoni
India-s-MS-Dhoni

உலக கோப்பை போட்டி நேற்று இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் பலப்பரீட்சை நடைபெற்றது இதில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது, இதற்கு தோனிதான் காரணம் தோனியின் மெதுவான ஆட்டம் தான் காரணம் என பலரும் விமர்சித்து வருகிறார்கள். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 337 ரன்கள் எடுத்து இருந்தது, இந்த மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி பவர் பிளேவை பயன்படுத்திக் கொள்ளாமல் மிகவும் பொறுமையாக ஆடியது, ஆனால் என்ன பயன் இலங்கை அணியின் இலக்கை எட்ட முடியவில்லை இதனால் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இந்திய அணி இந்த போட்டியின் போது தொடக்கத்தில் இருந்து நன்றாக தான் விளையாடி வந்தது run rate நன்றாக இருந்தது அதே போல், குறிப்பாக கோலி மற்றும் ரோஹித் அவுட்டாகும் முன் தங்களது அதிரடியான ஆட்டத்தை ஆடினார்கள் அதேபோல் பாண்டியா அவுட் ஆகும் வரை மிகவும் அதிரடியாக ஆடினார், அது மட்டும் இல்லாமல் பாண்டிய ஆடும்பொழுது இந்திய அணியின் ரன் ரேட் இங்கிலாந்து அணிக்கு ஈடாக தான் இருந்தது.

அதேபோல் ஒரு ஓவருக்கு 8 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற எளிய இலக்குடன் தான் இந்திய அணி இருந்தது ஆனால் இந்த நிலை மிகவும் மோசமானது போகப்போக. அதுவும் தோனி களம் இறங்கியதும் இந்திய அணியின் ரன் ரேட் மிக மிக மோசமானது, அதனால் வெற்றி கொஞ்சம் கை நழுவியது அதேபோல் அதிக ரன்கள் அடிக்கும் இலக்குடன் இந்தியா இருந்தும் தோனி அதிரடியாக ஆடவில்லை மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், கேதார் ஜாதாவும் கடைசியில் சிங்கிள் மட்டுமே ஆடிக் கொடுத்தார், இவர்களின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

அதேபோல் ரசிகர்கள் தோனி ஏன் இப்படி விளையாடுகிறார், இவ்வளவு ரன் எடுக்க வேண்டிய இக்கட்டான நிலையிலும் இப்படி பொறுமையாக ஆடுகிறார் என பலர் அதிர்ச்சி அடைந்தார்கள், கடைசியில் 14 பந்துகளில் 50 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை வந்த பிறகும் இவர்கள் அதிரடியாக விளையாட வில்லை இதனால் ரசிகர்களின் மனசு விட்டுப் போனது, இதற்கு மேல் இந்த ரன்னை தோனியால் அடித்து பினிஷ் செய்ய முடியாது என ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள், இவர்களின் மந்தமான ஆட்டமே இந்தியாவின் தோல்விக்கு காரணம் என பலர் விமர்சித்து வருகிறார்கள், மேலும் டோனிக்கு எதிராக ரசிகர்கள் விமர்சனம் ஆன கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.