நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியும் இந்திய அணியும் மோதிக்கொண்டன இதில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியது என பலரிடம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது, இதைப்பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாக்கர் யூனிஸ் செய்துள்ள ட்வீட் ரசிகர்களிடம் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியது, நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 337 ரன்கள் எடுத்து இருந்தது 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 306 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, இதனால் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது, இந்தியா ஜெயிக்க வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்களும் ஆவலுடன் இருந்தார்கள் ஏனென்றால் இந்தியா ஜெயித்தால் பாகிஸ்தான் அணிக்கு செமி பைனல் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது பாகிஸ்தான் அணியின் semi-final நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது, அடுத்து நடக்க இருக்கும் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியுடன் கண்டிப்பாக தோல்வி அடைய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது, அப்படி தோல்வியடைந்தால் பாகிஸ்தான் அணியால் வங்காளதேசத்தை வென்று செமி பைனல் செல்ல முடியும். அதனால்தான் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி ரசிகர்கள் இந்தியாவிற்கு பெரிய அளவில் ஆதரவு கொடுத்தார்கள் இந்தியா வெற்றி பெற வேண்டும் என வேண்டினார்கள்.
It's not who you are.. What you do in life defines who you are.. Me not bothered if Pakistan gets to the semis or not but one thing is for sure.. Sportsmanship of few Champions got tested and they failed badly #INDvsEND #CWC2019
— Waqar Younis (@waqyounis99) June 30, 2019
ஆனால் இந்திய அணியோ மோசமாக தோல்வி அடைந்தது அதனால் அனைத்து ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள், இந்த தோல்வி பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாக்கர் யூனிஸ் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் இந்த பதிவு ரசிகரிடம் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது, அவர் கூறியதாவது நீங்கள் யார் என்பது முக்கியமில்லை, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும், பாகிஸ்தான் அணி செமி பைனலில் செல்லவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் சில வீரர்களின் நேர்மையான போட்டி மனப்பான்மை நேற்று சோதிக்கப்பட்டது.
அதை அவர்கள் மிகவும் மோசமாக தோல்வி அடைந்து விட்டார்கள், நேற்றைய போட்டியில் கடவுளே இந்தியா வெல்லக் கூடாது என்றுதான் விளையாடி உள்ளார்கள், நேற்றைய இந்தியாவின் ஆட்டத்தில் நேர்மை கிடையாது இவ்வாறு மறைமுகமாக அவர் குற்றம் சாட்டியுள்ளார், மேலும் இவர் மறைமுகமாக தோனியை கூறியுள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள், அதனால் தோனி அவ்வாறு கிடையாது என்று தங்களது கருத்தை பதிவு செய்து வருகிறார்கள் ரசிகர்கள் மேலும் இவரின் டுவிட்டுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.இந்திய அணி மீது மேட்ச் ஃபிக்ஸிங் போல் இவர் கருத்துக் கூறியுள்ளது ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.