நடிகை இந்துஜா வைபவ் நடிப்பில் வெளியாகிய மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இவர் தற்பொழுது விஜய் நடிப்பில் வெளியாகிய தளபதி63 திரைப்படமான பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
விஜயின் பிகில் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 25-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆகியது. பிகில் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
அதுமட்டுமில்லாமல் பிகில் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன, மேலும் இந்த திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக இந்துஜா நடித்துள்ளார். இவரின் உண்மையான பெயர் ஹிந்துஜா தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக இந்துஜா என மாற்றிக் கொண்டார் இவர் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

மேயாத மான் திரைப்படத்தில் தங்கையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர், அதுமட்டுமில்லாமல் பிரபுதேவா நடிப்பில் வெளியாகிய மெர்குரி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்திலும் நடித்து இருந்தார். இந்த நிலையில் இந்துஜா பிகில் படக்குழுவுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படத்தில் இந்துஜா விஜய்க்கு கேக் ஊட்டி மகிழ்ந்துள்ளார், அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கும் கேக் கொடுத்து தன்னுடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய உள்ளார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.