தளபதி 65 திரைப்படத்தில் சிவகார்த்திகேயனா.? என்ன ரோல் தெரியுமா.?

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி 250 கோடி வசூல் குவித்தது என கூறப்படுகிறது. மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வந்த கால கட்டத்தில் வெறும் 50 சதவீத இறுக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் திறக்கப்பட்டன.

அப்படி இருந்தாலும் படத்தை மிகவும் தைரியமாக வெளியிட்டிருந்தார்கள் படக்குழு. படம் வெளியாகி 16 நாட்களிலேயே அமேசான் பிரைம் வீடியோவிலும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இரண்டிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலில் கல்லா கட்டியது.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில். டாக்டர் திரைப்படத்தை இயக்கி வரும் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.

இந்த திரைப்படத்தை சூட்டிங் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளிநாட்டில் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு மற்றும் புகழ் ஆகியோர்கள் நடிக்க இருக்கிறார்கள் வில்லனாக நவாசுதீன் சித்திக், வித்யூத் ஜம்வால் ஆகியோர் இருவரும் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியானது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க தளபதி65 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி  இணைந்து நடித்த மாபெரும் ஹிட்டடித்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நெல்சன் திலிப்குமார் அவர்களின் நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தளபதி 65 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதுவார் என கோலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளன. ஏனென்றால் இதற்கு முன் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் கல்யாண வயசு பாடலை சிவகார்த்திகேயன் தான் எழுதியிருந்தார். அதேபோல் டாக்டர் திரைப்படத்திலும் செல்லம்மா பாடலை சிவகார்த்திகேயன் தான் எழுதியிருந்தார்.

இந்தநிலையில் தளபதி விஜய்க்கு பாட்டு எழுதுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. மேலும் சிவகார்த்திகேயன் அனிருத் இசையில்  பாடலை எழுதுவார் அல்லது நடிப்பார்  இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

tweet
tweet

இதில் ஒரு விஷயம் என்னவென்றால் இந்த திரைப்படத்திற்க்கு நடன இயக்குநராக பணியாற்றும் சதீஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் பேனாவ எடுத்தா பஸ்ட் பிளாக்பஸ்டர் தான்னு எழுதுவிங்க போல அப்புறம் தான் பாட்டு எழுதுவீங்கன்னு நினைக்கிறேன் நெல்சன் திலீப்குமார் t65 பாடல் வீடியோவில் அறிவிக்க காத்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.