கமல் இல்லாததால் பிக்பாஸ் 5 : நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார்.? இவர்களில் யாரோ ஒருவர் தான்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் கமலஹாசன் இளம் வயதில் இருந்தே பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து மக்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் பல வருடங்களுக்கு முன்பு வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடித்து இருந்தார்.

அதன் பிறகு தற்போது இந்த விக்ரம் படத்தில் போலீசாக நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. மேலும் இவர் அரசியல்  சினிமா என பல்வேறு துறைகளிலும் சிறப்பாக ஜொலித்து வருகிறார். இதனையடுத்து சில வருடங்களாக இவர் சின்னத்திரையிலும் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடரை சீசன் சீசனாக தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் இந்த சீசன் 4 சீசன்களை முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் தொடர்ந்து கமலஹாசனை தொகுத்து வழங்கி வருகிறார். இப்படி சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் கமலஹாசனுக்கு  சமீபத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாம் என்ற செய்தியை அவர் ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார்.

அவர் சமீபத்தில் அமெரிக்கா பயணம் முடித்து திரும்பிய பின் அவருக்கு லேசான இரும்பல் இருந்ததாம். அதனால் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாம் இதனால் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன் என தெரிவித்துள்ளார். இப்படி இருக்கையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து யார் தொகுத்து வழங்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

இதற்கிடையே கமலின் மகள் ஸ்ருதிஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் எனவும் பேசி வருகின்றனர். மேலும் இதே நேரத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் போன்றவர்களின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

Leave a Comment