சம்பள விஷயத்தில் தனுஷ், சூர்யாவை ஓவர்டேக் செய்து தனக்கான இடத்தை பிடித்த ராகவா லாரன்ஸ்.! எல்லாத்துக்கும் காரணம் இதுதான்.

0

சமீப காலமாக திரை உலகில் சிறப்பான படங்களை கொடுத்து வரும் தனுஷ் சூர்யா இருவரையும் நடிகரும் இயக்குனருமான பிரபலம் ஒருவர் சம்பள விஷயத்தில் ஓரம் கட்டி உள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர் வேறு யாருமல்ல ராகவா லாரன்ஸ் தான். தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின்னாட்களில் தனது அசாதாரணமான நடிப்பை படங்களில் காட்டியதால் அவருக்கு ஹீரோயின் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.

கிராமத்து சாயலில் உள்ள கதைகளை முதலில் தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்பை வெளிப்படுத்தியதால் இவருகான ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினர்.

இதனால் இவரது மார்க்கெட் ஓரளவு தமிழ் சினிமாவில் இருந்தது. அவ்வப்போது சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்த இவருக்கு ஒருகட்டத்தில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இவரை நம்பி படம் எடுக்காமல் போக தானே படத்தை கதையை எடுக்க முன்வந்தார் அந்த வகையில் காஞ்சனா சீரிஸ் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க.

ராகவாலாரன்ஸின் மார்க்கெட் இந்திய அளவில் அசுர வளர்ச்சியை எட்டியது. பேய் படங்களை தொடர்ந்து எடுத்து வந்தால் ராகவா லாரன்ஸ் காட்டில் மழை அடிக்க ஆரம்பித்து உள்ளது. தற்போது ஒரு படத்துக்கு சம்பளமாக 50 கோடி  சம்பளம் வாங்குகிறார். இச்செய்தி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஜாம்பவான்களாக இருக்கும் சூர்யா தனுஷ் ஆகியோர் குறைந்த சம்பளம் வாங்குகின்றனர். இவர்களை விட ராகவாலாரன் திரை உலகில் சைலண்டாக இருந்துகொண்டு ஒரு படத்திற்கு  50 கோடி வாங்குகிறார்.

தனுஷ் ஒரு திரைப்படத்திற்காக சுமார் 21 கோடி சம்பளம் வாங்குகிறார் அது போல சூர்யா ஒரு திரைப்படத்திற்காக தற்போது 30 கோடி சம்பளம் வாங்குகிறார் ஆனால் இவர்களைவிட ராகவா லாரன்ஸ் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்.

இவரது கையில் அதிகாரம், ருத்ரன், சந்திரமுகி 2 ஆகிய படங்கள் வரிசை கட்டி இருக்கின்றன இதனால் அவரது மார்க்கெட் இன்னும் உச்சத்தை தொட்டும்.