தமிழகத்தில் மட்டும் வலிமை படம் முதல் நாளில் இவ்வளவு கோடி வசூல் செய்ய இருக்கிறதாம் – கேட்டு மிரண்ட டாப் நடிகர்கள்.

சினிமா உலகில் ஒரு சில கூட்டணி இணையும் பொழுது அந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு பிளாக்பஸ்டர் படமாக மாறும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் சிறப்பான இயக்குனர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார.

சமீபகாலமாக தனக்கு பிடித்த இயக்குனர்களுடன் தொடர்ந்து படங்களை பண்ணி வருகிறார் அந்த வகையில் சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்து அஜித் வீரம் விவேகம், விவேகம், விசுவாசம் போன்ற 4 ஹிட் படங்களில் நடித்தார் அதனை தொடர்ந்து தற்போது ஹச் .வினோத்துடன் கைகோர்த்து அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுக்க முனைப்பு காட்டி வருகிறார்.

முதலில் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கை தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் சிறப்பான முறையில் எடுத்து அஜித்திற்கு ஒரு படத்தை எடுத்துக் கொடுத்தார் வினோத். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வலிமை என்ற திரைப்படத்தை எடுத்துக் கொடுத்துள்ளார் இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

மேலும் இவர்களுடன் இணைந்து போனிகபூர் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வலிமை படத்தையும் அவர் மிக பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்து உள்ளார். வலிமை படம் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது இதனால் முதல் நாளில் இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் முதல் நாள் மட்டுமே 7, 8 ஷோக்களை நடத்த படக்குழு முனைப்பு காட்டி வருகிறது. இதனால் வலிமை படம் எதிர்பார்க்காத ஒரு வசூல் வேட்டையை நடத்துவதோடு மற்ற நடிகர்களின் முதல் நாள் வசூலை அடித்து நொறுக்க தற்பொழுது வலிமை படம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வலிமை படம் நள்ளிரவு ஒரு மணிக்கு படம் முதல் காட்சி வெளியாகும் பட்சத்தில் முதல் நாள் வசூல் மட்டும் இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 38கோடி வசூலை அள்ளும் என கணக்கிடப்பட்டுள்ளது

Leave a Comment