தமிழகத்தில் மட்டும் “வலிமை” திரைப்படம் 4 – நாட்களில் அள்ளிய கோடிகள் இவ்வளவா.? வாய்பிளக்கும் டாப் நடிகர்கள்.

valimai
valimai

நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த 24ஆம் தேதி கோலாகலமான முறையில் வெளியானது. வலிமை திரைப்படம் ஆக்சன் சென்டிமெண்ட் கலந்த திரைப்படமாக இருந்ததால் அஜித் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களை வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது.

முதல் இரண்டு நாட்களில் அஜித் ரசிகர்கள் கூட்டம். திரையரங்கை நாடிய நிலையில் தற்போது வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தேதிகளில் பொதுமக்கள் படத்தை பார்த்துகண்டுகளித்துள்ளனர். மேலும் பொதுவாக பெண்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.

அஜித்தின் வலிமை திரைப்படம் தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும்,  வசூல் ரீதியாகவும் வெற்றி நடை கண்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் வலிமை திரைப்படம் முதல் நாளில் 36.17 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் அதனை தொடர்ந்து வசூலில் சாதனை படைத்துக் கொண்டே வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை திரைப்படம் சென்னை ஏரியாவில் மட்டும் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அந்த வகையில் நான்கு நாட்களில் மட்டும் வசூல் நிலவரப்படி 5 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஓவர் ஆல் 4 நாட்களில் மட்டும் அஜித்தின் வலிமை திரைப்படம் சுமார் 85 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற இடங்களிலும் தொடர்ந்து வசூல் சாதனை புரிந்து வருவதால் நிச்சயம் வலிமை திரைப்படம் மிகப்பெரிய ஒரு சாதனை படைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் சந்தோஷத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.