சித்தி 2 சீரியலில் ராதிகாவுக்கு பதில் இந்த இரண்டு முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க துடிக்கும் சன் டிவி.!! அவங்களோ கழுவுற மீன்ல நழுவுறாங்க…

0

வெள்ளித்திரையில் எப்படி ஒரு திரைப்படம் நன்றாக ஓடினால் அந்த திரைப்படத்தின் பார்ட்-2 எடுக்க படுகிறதோ அதுபோல தற்போது சின்னத்திரையிலும் ஒரு சீரியல் நன்றாக ஓடினால் அதன் இரண்டாம் பாகம் எடுப்பது வழக்கமாக உள்ளது.

அந்தவகையில் நடிகை ராதிகா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்த சீரியல் சித்தி. இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தால் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் சித்தி 2  எடுக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த சீரியலில் நடிகை ராதிகா சித்தி கதாபாத்திரத்தில் நடிப்பதனாலேயே ரசிகர்கள் பெருமளவில் விரும்பி பார்த்தனர். இந்த நிலையில் இவர் தற்போது இந்த சீரியலில் நடிப்பதில் இருந்து விலகினார்.

இவர் சீரியலை விட்டு விலகியதால் இவர் இல்லை என்றால் சித்தி 2 சீரியலில் ஒன்றுமில்லை என ரசிகர்கள் பார்க்காமல் இருந்து விடுவார்கள் என சன் டிவி நிறுவனம் அந்த கதாபாத்திரத்தில் ஏற்கனவே சன் டிவி சீரியலில் நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணனை நடிக்கவைக்க முடிவு செய்துள்ள்ளனராம்.

ramya-krishnan
ramya-krishnan

இவருக்கு அதிக சம்பளம் கொடுத்து எப்படியாவது இந்த சீரியலில் நடிக்க வைத்து விடலாம் என சன்டிவி அவரைத் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறதாம். அப்படி அவர் மறுத்தால் அதற்கு அடுத்தபடியாக நடிகை மீனாவை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து சன்டிவியின் டிஆர்பியை எப்படியாவது தக்கவைத்து விடலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.

meena-1
meena-1

இந்த இரண்டு நடிகைகளும் ஒத்துவரவில்லை என்றால் விரைவில் இந்த சீரியலுக்கு முழுக்கு போட முடிவு பண்ணி உள்ளதாம் சன் டிவி நிறுவனம்.