ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் பாரதிகண்ணம்மா சீரியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆரி.!வைரலாகும் புகைப்படம்.!

0
aari
aari

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக திகழ்ந்து வருகிறது ஏனென்றால் அந்த சீரியலில் நடிகர்கள், நடிகைகள் அவ்வளவு அருமையாக நடித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளார்கள்.

அந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்றுதான் கூற வேண்டும் மேலும் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக தற்போது பாரதிகண்ணம்மா சீரியல் தொடர் மற்றும் பிரபல ராஜா-ராணி-சீரியல் ஆகிய இரண்டு சீரியல்களும் இணைந்து மகா சங்கமம் நடந்து வருகிறது.

மேலும் இந்த தொடரில் அண்மையில்தான் குக் வித் கோமாளி பிரபலங்களான பாலாஜி,சரத்,ஷிவாங்கி ஆகியோர் கலந்து கொண்டார்கள் அதுமட்டுமல்லாமல் அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தியும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்த இரண்டு குடும்பங்களும் சேர்ந்து ஒரு சூப்பர் குடும்பம் என்ற போட்டியில் கலந்து கொள்வது போலான காட்சிகள் அமைக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் அந்த புகைப்படத்தில் நடிகரும் பிக் பாஸ் டைட்டில் வின்னருமான ஆரி கலந்து கொண்டுள்ளார் மேலும் ஆரி இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கொடுத்து பாராட்டுவது போல் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

aari
aari

இதனையடுத்து இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக ஆரி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.