ஒருவழியாக என் புருஷனுடன் சேர்ந்து விட்டேன்.! பிரேம்ஜியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிரபலம் போட்ட பதிவு.! பற்றி எரியும் இணையதளம்…

0
prem-ji
prem-ji

தமிழ் சினிமாவில் குணச்சத்திர வேடத்தில் நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகர் தன் பிரேம்ஜி அமரன். இவர் தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆனா கங்கை அமரனின் மகன். பிரேம்ஜி மற்றும் வெங்கட் பிரபு இருவருமே சகோதரர்கள். பிரேம்ஜி நடிகர் மட்டுமல்லாமல் பாடலாசிரியர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என பலவகையில் பணியாற்றியுள்ளார்.

மேலும் என்ன கொடுமை சார் என்ற வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கினார் தமிழ் சினிமாவில் முதன் முதலில் இவர் இயக்குனராக தான் அறிமுகமானார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகிய சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் பிரேம்ஜி நடிக்க ஆரம்பித்தார்.

அதனைத் தொடர்ந்து மங்காத்தா, சேட்டை, கோவா என பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார் மேலும் பிரேம்ஜி தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் பார்ட்டி என்ற திரைப்படத்திலும் ஜோம்பி என்ற திரைப்படத்திலும் இசையமைத்துள்ளார். இதில் பார்ட்டி என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பிரேம்ஜி அவர்களுக்கு வயது ஆகிவிட்டது இன்னும் திருமணம் நடைபெறவில்லை அதனால் இவருக்கு எப்பொழுது திருமணம் என பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினார்கள் அது மட்டும் இல்லாமல் இவருக்கு திருமணம் ஆகுமா? ஆகாதா என்ற கேள்வி பல ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீப காலமாக பிரேம்ஜி வினைதா என்பவரை காதலித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

43 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் பிரேம்ஜி சில மாதங்களுக்கு முன்னர் பிரபல பாடகி வினைத்தா என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் கிடைத்தது அது மட்டுமில்லாமல் அவர்கள் இருவரும் ஒன்றாக  இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆனது. அப்படி இருக்கும் வகையில் தற்பொழுது வினைதா தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் பிரேம்ஜியை கட்டிப்பிடித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வினைதா தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அது மட்டும் இல்லாமல் என் புருஷன் உடன் மீண்டும் சேர்ந்து விட்டேன் என்று பதிவு செய்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இருவருக்கும் ரகசிய திருமணம் ஆகிவிட்டதா.. அல்லது இனிமேல்தான் திருமணம் ஆகப்போகிறதா என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

ஒரு சில ரசிகர்கள் எது எப்படியோ பிரேம்ஜி அவர்களுக்கு திருமணம் ஆகி வாழ்க்கையில் செட்டில் ஆனால் சரிதான் என வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த புகைப்படத்தில் இருப்பதற்கு காரணம் என்ன என்பதை இருவரில் யாராவது ஒருவர் வாய் திறந்து கூறினால் தான் உண்மை நிலவரம் என்ன என்பது தெரிய வரும்.

vinaitha
vinaitha