கேப்ரில்லாவின் மீது காதலா.? என்ற கேள்விக்கு பதில் அளித்து ரசிகர்களை அதிர்ச்சிப் படுத்திய பிக்பாஸ் அஜீத்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பலருக்கும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துவரும் நிலையில் பிக்பாஸ் சீசன் நான்காவது நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்கள் தான் அஜித் மற்றும் கேப்ரில்லா இவர்கள் இருவரும் இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்த்த பலரும் இவர்கள் காதலிப்பதாக கூறி வருகிறார்கள்.

இதன் காரணமாக சமீபத்தில் இது பற்றி கேள்விக்கு அஜித் கூறிய பதில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது இருவரை வைத்து அவர்கள் காதலிப்பதாக கிசுகிசு ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் முதல் சீசனில் ஓவியா-ஆர்வம், இரண்டாவது சீசனில் மகத் யாஷிகா மூன்றாவது சீசனில் கவின்-லாஸ்லியா, நான்காவது சீசனில் பாலாஜி-ஷிவானி, ஐந்தாவது சீசனில் அமீர்-பாவனி ரெட்டி என தொடர்ந்து ஆகியோர்கள் காதலிப்பதாக கூறப்பட்டது.

இப்படிப்பட்ட நிலை பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு பிறகு போட்டியாளர்களாக கலந்துக் கொண்ட ஆஜித் மற்றும் கேப்ரில்லா இருவரும் தற்பொழுது காதலித்து வருகிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஆஜித் பாட்டு பாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இதனை வைத்து 100 நாட்கள் வரையிலும் இந்நிகழ்ச்சியில் தன்னை தக்க வைத்துக் கொண்டார்.

பிறகு கேப்ரில்லா புத்திசாலித்தனமாக கண்டிப்பாக எப்படியாக இருந்தாலும் இந்நிகழ்ச்சியில் நாம் வெற்றி பெற மாட்டோம் என்று 5 லட்ச ரூபாய் பெட்டியை எடுத்துக் கொண்டு இந்நிகழ்ச்சியை விட்டு பாதிலேயே வெளியேறினார். இந்நிகழ்ச்சிற்க்கு பிறகு இவர்கள் நெருக்கமாக இருந்து வரும் நிலையில் தொடர் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் இணைந்து நடனமாடிய வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்கள் எனவே அந்த வீடியோக்களும் வைரலாகி வந்த நிலையில் தற்போது கேப்ரில்லாவுடன் காதலா என்ற கேள்விக்கு மனம் திறந்து பதில் அளித்துள்ளார் ஆஜித்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது நாங்கள் இருவரும் அதிக அளவு சண்டை போட்டோம் ஆனால் டிவியில் ஒரு சண்டையைக் கூட காட்டவில்லை சண்டை போட்டாலும் உடனே நாங்கள் சேர்ந்து விடுவோம் எங்கள் இருவருக்கும் எப்போதும் காதல் உண்டானதே இல்லை இன்னும் சொல்லப்போனால் நாங்கள் இருவரும் அண்ணன் தங்கையாக தான் பழகி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment