கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகை இவர் தான்!! அப்ப நயன்தாராலாம் சும்மாவா…

0

in google mostly searched actress: நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட மொழியில் வெளியான கிரீக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர் அதனைத் தொடர்ந்து விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து கீதகோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

பின்னர் அதனைத் தொடர்ந்து விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து தேவதாஸ், டியர் காம்ரேட் போன்ற பல திரைப்படங்களில் மிகக்குறுகிய காலத்திலேயே தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார்.

பின்னர் தெலுங்கில் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுடன் இணைந்து சரிலெரு நீக்கெவ்வரு என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படமும் சூப்பர் ஹிட்டானது.

மேலும் தற்போது தமிழில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் தற்போது சூர்யாவுடன் இணைந்து அருவா திரைப்படத்தில்  நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகை இவர்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே  தற்போது கூகுளில்  நேஷனல் க்ரஷ் ஆஃப் இந்தியா என இவர் பெயர் தான் வருகிறதாம்.

மேலும் தற்போது உள்ள தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து முன்னணி நடிகைகளையும்  ஓரம் கட்டி இவர் முன்னிலையில் உள்ளது மட்டுமல்லாமல் இவரது சம்பளமும் உயர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.