2022 -ல் அதிக முன்பதிவு செய்யப்பட்ட 10 படங்கள் – லிஸ்ட்டில் இடம் பிடிக்க தவறிய அஜித், விஜய்..

தமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்கின்றன ஆனால் அதில் ஒரு சில படங்கள் மட்டுமே மிகப் பெரிய வசூல் சாதனை செய்து இடம் பிடிக்கும்.. ஒரு சில படங்கள் விருதுகளை அள்ளும் இப்படி வருடத்தில் புதுப்புது சாதனைகளை படங்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில் இந்த வருடத்தில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்த பொழுதிலும் வசூல் ரீதியாக 200 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது அதேபோல விஜயின் பீஸ்ட் திரைப்படமும் கலவையான  விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது.

இந்த படங்களை தொடர்ந்து அஜித் நடித்த துணிவு, விஜயின் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு மோதிக் கொள்ள இருக்கிறது. இந்த ரேஸில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்களும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல டிக்கெட் புக்கிங் தளமான புக் மை ஷோ 2022 – ல் அதிகம் தங்களுடைய தளத்தில் புக் செய்யப்பட்ட 10 படங்கள் குறித்து லிஸ்டை வெளியிட்டுள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். 1. யாஷ் நடித்த  KGF 2, 2. ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்த  RRR, 3. ரிஷப் ஷெட்டி நடித்த காந்தாரா, 4. தி காஷ்மீர் பைல்ஸ், 5. பிரபல தமிழ் இயக்குனர் மணிரத்தினம் எடுத்த பொன்னியின் செல்வன்..

6. பிரம்மாஸ்திரா, 7. கமல் நடித்த விக்ரம், 8. திரிஷ்யம் 2, 9. Bhool bhulaiyaa, 10. டாக்டர் ஸ்ட்ரேஞ் 2 போன்ற படங்கள் தான் இந்த ஆண்டில் அதிகம் புக் செய்யப்பட்ட திரைப்படங்கள் இந்த லிஸ்டில் அஜித் நடித்த வலிமை, விஜய் நடித்த பீஸ்ட் போன்ற படங்கள் முதல் 10 இடத்தை பிடிக்க தவறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.