பொன்னியின் செல்வன் படத்தினை பற்றி மணிரத்தினத்திடம் கேட்காமல் லைக்கா நிறுவனம் எடுத்த முக்கிய முடிவு.!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் மேலும் அவர்களுக்கு பெரும் பங்கு சம்பளம் போய் உள்ளது. அதோட மட்டுமல்லாமல் அவர்கள் அணிந்திருந்த ஆடை, அணிகலன்கள் என ஒவ்வொன்றும் வாங்குவதற்கு மிகப்பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தினை மணிரத்தினம் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது எவ்வாறு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி எவ்வளவு வசூல் செய்தியாக வெற்றி பெறுகிறதோ அதில் 30 சதவீதம் மணிரத்தினத்திற்கும், 70 சதவீதம் லைக்கா நிறுவனத்திற்கும் சேரும்.இவ்வாறு மணிரத்தினம் சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடலான சோழா சோழா என்ற பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதில் பிரபலங்களும் இணைந்து இருந்தார்கள் மேலும் விஜயின் வாரிசு திரைப்படத்தினை தயாரித்து வரும் தில்ராஜ் அவர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் தில்ராஜ் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாடலை பார்த்தவுடன் இந்த படத்தை தெலுங்கில் நான் வெளியிடுகிறேன் என கூறி உள்ளார்.

இவ்வாறு லைக்கா நிறுவனம் மணிரத்தினிடம் இதைப் பற்றி கூறாமலே இப்படத்தின் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் இடம் ஒப்படைத்துள்ளது. வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெரும் என பொன்னியின் செல்வன் திரைப்படத்தினை எதிர்பார்த்த நிலையில் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏனென்றால் அதற்கு முக்கிய காரணம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தின் வெளியிட்டால் அவர்களுக்கும் பங்கு தர வேண்டும் அதன் பிறகு லைகா நிறுவனம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இல்லாமல் தற்பொழுது எந்த படத்தையும் ரிலீஸ் செய்ய முடியாது இதன் காரணமாக அந்த நிறுவனத்திற்கு படத்தை கொடுத்துள்ளோம் என கூறியதால் மணிரத்தினமும் போனால் போகட்டும் வேறு வழி இல்லை என ஓகே செய்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி அன்று வானில் இந்திய படமாக ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் ரிலிஸ்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.

Leave a Comment