விட்ட குறை தொட்ட குறை.. சிவகார்த்திகேயன் மேல என்ன தப்பு.. இமானுக்கு எதிராக பொங்கிய முன்னாள் மனைவி.!

imman ex wife support sivakarthikeyan : ஒரு காலத்தில் அண்ணன் தம்பியாக பழகி வந்தவர் சிவகார்த்திகேயன் மற்றும் இமான். சிவகார்த்திகேயன் பல திரைப்படங்களுக்கு இமான் இசையமைத்துள்ளார் ஆனால் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஈமான் இனி ஜென்மத்திலும் சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு இசையமைக்க மாட்டேன் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என ஒரு பெரிய அணுகுண்டு வீசி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை என்னால் மன்னிக்கவே முடியாது அதனை என்னால் வெளியே சொல்ல முடியவில்லை என் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமைதியாக இருக்கிறேன் என கூறிவிட்டார். இதுகுறித்து பத்திரிகையாளர் பிஸ்மி  தம்பி என்று வீட்டுக்குள் இமான் அனுமதித்தார் ஆனால் அவர் பொறுக்கி தனத்தை காட்டிவிட்டார் என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்

அது மட்டும் இல்லாமல் வலைப்பேச்சு அந்தணன்  நாங்கள் அப்போவே சொன்ன மாதிரி இப்பொழுது சிவகார்த்திகேயனை பற்றி இமான் கூறிவிட்டார். பல ஹீரோக்கள் படத்தில் மட்டும் தான் ஹீரோவாக இருக்கிறார்கள் நிஜத்தில் வில்லனாக இருக்கிறார்கள் என கூறியுள்ளார். இதன் நிலையில் டி இமான் பேட்டியில் பேசியது குறித்து முதல் மனைவி தற்போது  அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் பேசியதாவது சிவகார்த்திகேயன் எங்கள் குடும்பத்தில் நண்பர் நானும் இமானும் பிரியக்கூடாது என்று நினைத்தார் சிவகார்த்திகேயன்  எங்களுக்குள்ள விவாகரத்து நடக்கக் கூடாது என நினைத்து சமாதானம் பேசி பஞ்சாயத்து பண்ணி வைத்தார் இமானோட விவாகரத்து பிரச்சனைக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் பண்ண வில்லை சிவகார்த்திகேயன் நியாயத்தின் பக்கம் நின்றார் அவர் மீது எந்த தவறும் இல்லை என ஈமானின் முன்னாள் மனைவி பேசி உள்ளார்.

இமானின் முன்னாள் மனைவியின் பெயர் மோனிகா ஆனால் சமூக வலைதளத்தில் மோனிகா குறித்தும் சிவகார்த்திகேயன் குறித்தும் பல தகவல்கள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.