வலிமை படத்தின் கதையை ஒரு வரியில் சொன்ன IMBD.? இது தான் உண்மையா ஷாக்காகும் தல ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படத்தையாவது உறுதியாக கொடுப்பது ரசிகர்களுக்கு விருந்து படைப்பது வழக்கம். அந்த வகையில் சூர்யா ,விஜய்  ஆகியோர் திரைப்படங்கள் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை கண்டன. ஆனால் அஜீத் படம் மட்டும் ஒரு வருடத்திற்கு மேலாகியும் வெளிவராமல் இருக்கின்றன.

இளம் இயக்குனர் ஹச். வினோத் இரண்டாவது முறையாக அஜித்துடன் இணைந்து “வலிமை” என்ற திரைப்படத்தை எடுத்து க்கொண்டு வருகிறார்.

ஓராண்டுக்கு மேலாக இந்த திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் மேலும் இந்த படத்தில் இந்த ஒரு தகவலும் வெளிவராமல் ரகசியமாக மறைத்து வைத்து வருகிறது படக்குழு.

ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த ரசிகர்கள்  கண்ணில் பார்பவர்களை எல்லாம் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர் இதனால் படக்குழு எப்படியாவது முதலில் ரசிகர்களுக்கு அப்டேட் வெளியிட்ட பின்பு கூட படத்தின் மீதி படப்பிடிப்பு எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்வது.

தல அஜித் பிறந்த நாளான மே 1 தேதி பிரஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டம் தீட்டியுள்ளது.இப்படி இருக்க அஜித்தின் வலிமை பட கதை கசிந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. “IMBD” பக்கத்தில் இருந்து வலிமை படத்தின் கதையை ஒரு வரியில் குறிப்பிட்டுள்ளது.

வலிமை படத்தில் அஜித் பைக் ரேஸ் ஓட்டும் நபராக இருப்பாராம், அப்பொழுது அவருடன் இருக்கும் நெருங்கிய நண்பர்கள் அஜித்தை பழி வாங்கி ஓரங்கட்டி விடுகிறார்.  ஒரு கட்டத்தில் அவர்களை பழிவாங்க அவர் போலீஸ் அதிகாரியாக அவதாரமெடுத்து அவர்களை வேட்டையாடுவதே இந்த படத்தின் கதை என கூறப்படுகிறது.

இதில் அங்கங்க குடும்ப கதையை தீனித்து  மக்களை கவர கமர்ஷியல் கலந்த மாசாலவை சேர்த்து உள்ளனராம் அதனால் படம் வேற இருக்கு வேற கூறப்படுகிறது.  இது இந்த IMBD பக்கத்தில் இருந்து வந்திருக் கிறதே தவிர இது தான் படத்தின் கதையா என்றால் தெரியாது.

படம் இது போன்று இருக்க போவதில்லை ஏனென்றால் ஹச். வினோத்  வித்தியாசமான படங்களை கொடுத்துள்ளதால் இதுவும் வேறு ஒரு கதை களத்தில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version