மகனுக்காக படத்தை செதுக்குறேன் என்ற பெயரில் கண்ணாபின்னாணு எடுத்த இமயம் இயக்குனர்.! “தாஜ்மஹால்” தோல்வி அடைய இது தான் காரணம்.

தமிழ் சினிமாவின் பல்வேறு விதமான திரைப்படங்களை இயக்கி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றவர் இயக்குனர் பாரதிராஜா. அதன் முலம் தமிழ் சினிமாவிற்கும் மக்களுக்கு தான் ஒரு சிறந்த படைப்பாளி புரியவைத்தார் இயக்குனர் பாரதிராஜா.

கிராமத்து கதையில் இவரை போன்ற ஒரு சிறப்பான படத்தை எடுக்க இன்னொருவர் தமிழ் சினிமாவில் இல்லை என்றே கூற வேண்டும் அந்த அளவிற்கு கிராமத்து சாயலில் உள்ள படங்களை மிக நேர்த்தியாக எடுத்து வெற்றி கொண்டவர் என்பது குறிபிடத்தக்கது.

அதற்காக திரையுலகில் தோல்வியே சந்திக்காத இயக்குனர் என்று நாம் சொல்ல முடியாது அதுவும் பாரதிராஜா. அவரது மகனை வைத்து எடுத்த தாஜ்மஹால் திரைப்படம் ரசிகர்களை ஓரளவு கவர்ந்தாலும் இந்த திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவியது இது வெற்றி பெறாதற்கு இந்த 4 தவறான முடிவுகளே என கூறப்படுகிறது.

1. தாஜ்மஹால் படம் படத்தில் நடித்தவர்கள் அனைவரும் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதைக்கு ஏற்றவாறு இருந்தாலும் இந்த திரைப்படம் எப்படி தொடங்கியது எங்கும் முடிகிறது ஏன் இப்படி நடக்கிறது என்பதை சரியான வித்தில் எடுத்துரைக்காதல் படம் பார்த்தவர்களுக்கு புரியவேயில்லை.

2. பாரதிராஜா முதலில் இந்த திரைப்படத்தை நகரத்தை மையப்படுத்தி தான் கதை எழுதினார் ஆனால் தனக்கு அது வெற்றி கொடுக்காது என்பதற்காக அதை மாற்றி கிராமத்து சாயலில் எடுத்தார். கதையை அப்படியே வைத்து திரைக்கதையை மாற்றி எழுதினார். இதுவே இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய ஒரு மைனஸ் ஆக பார்க்கப்பட்டது.

3.  தாஜ்மஹால் திரைப்படம் எந்த கருத்தை சொல்ல வந்தது அதை சரியாக சொல்லாததால் மிகப்பெரிய தோல்வியை தழுவ வேண்டிய தாயிற்று.

4. இந்த திரைப்படத்தை பார்த்தால் இது தமிழ் படம் சாயலில் இல்லாதது போன்று தோன்றியது இந்த திரைப்படம் தெலுங்கு படம் ஹிந்தி படம் என்பது போல ஒரு கேள்வி தோன்றியது.

இதுவே திரைப்படத்திற்கு வெற்றியை கொடுக்காமல் போனதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த தகவலை சித்திர லட்சுமணன் பிரபல யூ டுப் தளத்தில் கூறியுள்ளார் அதை நாங்கள் தொகுத்து வழங்கி உள்ளோம்.

Leave a Comment