இமான் அண்ணாச்சியின் செயலை பார்த்து நெகிழும் ரசிகர்கள்.! அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தும் இமானா இப்படி.?

0

Iman who provided food for 300 families in Tambaram : சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் இமான் அண்ணாச்சி ஆவார். இவர் தொகுப்பாளராகவும்,  காமெடி நடிகராகவும் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பான சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டீஸ் சுட்டீஸ் போன்ற நிகழ்ச்சியின் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்  மனதிலும் இடம் பிடித்தார் வந்தவர்.

தமிழில் 2006ஆம் ஆண்டு திரையுலகிற்கு வெளிவந்த சென்னை காதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தலைநகரம், வேட்டைக்காரன், கோ, மெட்ராஸ், புலி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கலக்கி வருகிறார். இது மட்டுமின்றி இன்னும் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மிகவும் பிரபலம் அடைந்தார். தற்பொழுது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஊரடங்கு உத்தரவின் காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக உலகமே முடங்கியுள்ளது .இந்நிலையில்  சமூக ஆர்வலர்கள்  ஏழைகளுக்கு உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் இமான் அண்ணாச்சி அவர்கள் தாம்பரத்தில் 300 குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார்.