சமீபகாலமாக ஒவ்வொரு தொலைக்காட்சியும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி ரசிகர்களை கவர்ந்த வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் பார்வையை திசை திருப்பி வருகிறது.
அந்தவகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது அதனால் தற்பொழுது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை டிஸ்னி ஹாட் ஸ்டார் 24 மணி நேரமும் ஒளிபரப்பி வருகிறார்கள் இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டவர்தான் ஆரவ் இவர் வெற்றியும் பெற்றார்.
இவர் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் இவருக்கு அறிமுகத்தைப் பெற்றுக்கொடுத்தது தற்பொழுது தொடர்ந்து பிசியாக படங்களில் நடித்து வருகிறார் ஆரவ்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்தப் பேட்டியில் அஜித் திரைப்படங்கள் எது வந்தாலும் முதல் நாளே முதல் காட்சியை பார்த்து விடுவேன் ஆனால் தற்போது படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருப்பதால் இன்னும் வலிமை திரைப்படத்தை என்னால் பார்க்க முடியவில்லை.
ஆனால் அஜித் திரைப்படம் திரைக்கு வருவது வருகிறது என்றாலே முதல் நாளே முதல் காட்சியை பார்த்து ரசித்தவன் நான் அதுமட்டுமில்லாமல் அஜித் திரைப் படத்தை பார்ப்பதற்காக சில நேரங்களில் முக்காடு போட்டுக்கொண்டு எல்லாம் திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளேன் என ஆரவ கூறியுள்ளார்.