வலிமை படத்தின் டிக்கெட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் இளம் நடிகை போட்ட அதிரடி ட்விட்.! அப்போ நீங்களும் அஜித் ரசிகையா

அஜித் நடித்த வலிமை திரைப்படத்தை பார்க்க டிக்கெட்காக வெயிட்டிங்கில் இருக்கிறேன்.  இளம் நடிகை ஒருவர் தன்னுடைய ட்விட்டரில் அறிவித்துள்ளார் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை நேர்கொண்டபார்வை திரைப்படத்தை இயக்கிய வினோத் தான் இயக்கி உள்ளார் அதேபோல் போனிகபூர் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது ரிலீசுக்கு தயாராகி விட்டது.

இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் மிகவும் பிரம்மாண்டமாக வெளியிட இருக்கிறார்கள். இந்த நிலையில் படத்தை காண பல பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் டிக்கெட் முன்பதிவு செய்து உள்ளார்கள். வலிமை திரைப்படத்தை காண மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே காத்துக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் ஒரு டீசரை வெளியிட்டு படக்குழு வலிமை திரைப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த நிலையில் தொலைக்காட்சி நடிகையுமான சினிமா நடிகையுமான சிவானி நாராயணன் சமூக வலைத் தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர்.

இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கமான  இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தனது பக்கம் கவர்ந்து இழுத்தவர் இவர் அடிக்கடி கவர்ச்சியான வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார். அப்படியிருக்கும் நிலையில் சற்று முன் ஷிவானி நாராயணன் வலிமை திரைப்படத்தை  காண்பதற்காக டிக்கெட்டுக்காக வைட்டிங் என்று பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் இவர் வெளியிட்ட ட்வீட்டை பார்த்து நாங்கள் வேண்டுமென்றால் டிக்கெட் எடுத்து தரட்டுமா என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

https://twitter.com/ShivaniNarayan_/status/1496097626072444931?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1496097626072444931%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiaglitz.com%2Fshivani-naranayan-waiting-for-ajith-in-valimai-first-show-ticket-tamilfont-news-308363

Leave a Comment